நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் சுதந்திரம் அடைந்த பின்னரும் எமது தேசிய பொருளாதாரம் காசுப் பயிர்க ளான தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு உற்பத்திப் பொரு ள்களிலேயே முழுமையாக தங்கியிருந்தது. அன்று உலகெங்கிலும் 'சிலோன் ரீ' (Ceylon Tea) என்று இலங்கைத் தேயிலை எங்கள் நாட் டிற்கு பெருமையைத் தேடிக்கொடுத்தது. அன்று இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டாலும் எமது தேயிலை சுவையிலும் தரத்திலும் அவற்றைவிட பன்மடங்கு உயர் நிலையில் இருந்ததனால் இலங்கைத் தேயிலைக்கு உலக நாடுகளில் அந்தளவு பெரு மதிப்பும் வரவேற்பும் இருந்தது.
956ஆம் ஆண்டுக்குப் பின்னர் எங்களில் எவராவது வெளிநாட்டுக்குச் சென்று நாம் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகம் செய்யும் போது அவர்கள் உடனடியாக சிலோன் ரீ, பண்டாரநாய க்க என்று எங்கள் நாட்டின் அடையாளத்தை ஊர்ஜிதப்படுத்தும் அளவுக்கு அன்று எமது தேயிலையும் அன்று எங்கள் நாட்டின் பிரதமர்களாக இருந்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க, திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் உலக அரங்கில் புகழ் உச்சியில் பிரபல்யம் பெற்று விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
தேயிலைக்கு அடுத்த படியாக எங்கள் நாட்டின் தேசியப் பொருளா தாரத்துக்கு இறப்பர் பெரும் பங்களிப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இலங்கை இறப்பர் உலகில் பிரபல்யம் அடைவதற்கு 1952 ஆம் ஆண்டளவில் ஆரம்பித்த கொரிய யுத்தம் பேருதவியாக அமைந் தது. அன்று யுத்தத்திற்கான ஆயுதங்களையும் அடித்தள கட்டமைப் பையும் சிறப்பாக செய்து முடிப்பதற்கு இறப்பர் என்ற மூலப் பொருள் பேருதவியாக அமைந்தது. அதனால் அன்று இலங்கை இறப்பருக்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது.
1952 இல் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் இருந்தாலும் திரு. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவின் சோசலிசக் கொள்கையை கடைப்பிடித்து வந்த அன்றைய வர்த்தக அமைச்சர் ஆர். ஜி. சேனா நாயக்க சீனாவுடன் அரிசி இறப்பர் ஒப்பந்தத்தை செய்து சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்து அன்று இலங்கையில் தட்டுப்பாடாக இருந்த அரிசியை தங்கு தடையின்றி எமது நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு வகை செய்தார். அது போன்றே தெங்குப் பொருட்க ளும் இலங்கையின் தேசிய வருமானத்துக்கு அன்றும் இன்றும் என் றுமே பெரும் பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கின்றன.
1977ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே. ஆர். ஜயவர்த்தனவின் தலை மையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் எங்கள் நாட்டின் தேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு எவ்வித உத வியும் செய்யாத போதிலும் அவற்றை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆயினும் முதலாளித்துவக் கொள்கையைக் கடைப் பிடித்த ஜே. ஆர். ஜயவர்த்தனவின் அரசாங்கம் தன்னை ஆதரிக் கும் முதலாளிமார்களுக்கும் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கும் இறப் பர் தோட்டங்களை குத்தகைக்கு வழங்கி எங்கள் நாட்டின் இறப்பர் பெருந்தோட்டத் துறையை சீர்குலைப்பதற்கு அடித்தளத்தை அமை த்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 17 ஆண்டு கொடுங்கோல் ஆட்சிக்கு சாவு மணி அடித்து சோசலிசக் கொள்கையை கடைப்பிடிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டரசாங்கம் 1994 ஆம் ஆண்டு நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் இறப்பர் தோட் டங்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் நல்ல திட்டங்களை நிறைவேற்றியது.
அதனால் இன்று எங்கள் நாட்டில் இறப்பர் பெருந்தோட்டத் துறையில் ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு செப்டெம்பர் 12, 13, 14 ஆம் திகதிகளில் கொழும் பில் இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் நிலையம் ஒரு மா பெரும் கண்காட்சியை நடத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்துள் ளது. இதன் மூலம் எமது நாட்டின் இறப்பர் உற்பத்தியை பன்மட ங்கு அதிகரிக்க முடியும் என்று கைத்தொழில் மற்றும் வணிகத் துறையின் அமைச்சின் செயலாளர் அனுர சிறிவர்த்தன தெரிவித்து ள்ளார்.
2020 ஆம் ஆண்டில் இலங்கையில் இரண்டு இலட்சம் மெற்றிக்தொன் இறப்பரை, உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்று திரு. அனுர சிறிவர்தன நம்பிக்கை தெரிவித்துள் ளார். 2023 ஆம் ஆண்டில் நாம் இறப்பர் ஏற்றுமதியின் மூலம் 5 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாகப் பெறக்கூடிய வகை யில் திட்டங்களை வகுத்து அவற்றை சிறந்த முறையில் நிறைவேற் றிக் கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
இலங்கை இன்று இறப்பர் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் எட்டாவது இடத்தை வகித்து வருகின்றது. அன்று ஐக்கிய தேசியக் கட்சி அர சாங்கத்தின் தவறான கொள்கை மூலம் இறப்பர் தோட்டங்களின் வள ர்ச்சி சீர்குலைக்கப்படுவதற்கு முன்னர் நாம் இறப்பர் ஏற்றுமதி செய் யும் நாடுகளில் 3 ஆவது இடத்தை வகித்து வந்தமை குறிப்பிடத் தக்கது.
இறப்பரை மூலப் பொருளாக வைத்து இலங்கையில் இறப்பர் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் நிறுவனங்க ளுக்கு பல்வகையான பொருளாதார ரீதியிலான சலுகைகளையும், வரிச் சலுகைகளையும் செய்து இத்துறையின் மூலமும் எமது நாட் டின் தேசிய வருமானத்தைப் பெருக்கக்கூடிய வகையில் இறப்பர் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக் கைகளை எடுத்து வருவதாக திரு. அனுர சிறிவர்தன மேலும் தெரி வித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire