vendredi 23 novembre 2012

அமெரிக்கா விரைந்தார் ஜனாதிபதி!தனது கஸகஸ்தான் விஜயம் முடிவடைந்த கையோடு

 அதி முக்கியத்துவம் வாய்ந்த பயணமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.
தனது கஸகஸ்தான் விஜயம் முடிவடைந்த கையோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ­சரமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளமை­யானது அரசியல் வட்டாரங்களில் பெரும் பர­பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஸகஸ்தான் விஜயம் முடிவடைந்தவுடன் ஜனாதிபதி நாடு திரும்பவிருந்தார். எனினும், இறுதி நொடியில் அவரின் பயண நிகழ்ச்சிநிரல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒருவார காலம் அங்கு தங்கியிருக்கும் ஜனாதிபதி அங்கு முக்கிய சந்திப்புகளை நடத்துவார் என்று அறியமுடிகின்றது.
ஜெனிவாத் தீர்மானம், நல்லிணக்க   ஆணைக்குழுவின் அறிக்கை, தீர்வுத்திட்டப் பேச்சு, வடமாகாணசபைத் தேர்தல், ஐ.நா.உள்ளக அறிக்கை ஆகிய விடயங்கள் உட்பட முக்கிய பல விவகாரங்கள் தொடர்பில் இச்சந்திப்புகளின்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 குறிப்பாக, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவி இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் இந்தப் பயணமும் அமைந்துள்ளது.
 புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டே இவ்வாறு பயண நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும், இது தொடர்பில் அரசு இன்னும் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவி
பிரதமரை அமெரிக்காவில் நேரில் சந்தித்து நலன் விசாரித்தார் ஜனாதிபதிஐக்கிய அமெரிக்க வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்றுவரும் பிரதமர் டிஎம்.ஜயரத்னவை நேரில் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நலன்விசாரித்துள்ளார். 

கஸகஸ்தானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அதன் பின்னர் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார். 

அமெரிக்காவில் இலங்கை பிரதமர் சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி அவரை நலன்விசாரித்துள்ளார்.
 

Aucun commentaire:

Enregistrer un commentaire