jeudi 29 novembre 2012

புலிகளின் குழுக்கள் தோன்றியிருப்பதாக திவயின தெரிவித்துள்ளது.


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் மீண்டும் விடுதலைப்புலிகளின் குழுக்கள் தோன்றியிருப்பதாக புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர் என திவயின தெரிவித்துள்ளது.
கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் மற்றும் ஆனந்தகுமாரசுவாமி ஆகிய விடுதிகளில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ருந்த புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இராணுவப் புலனாய்வு பிரிவினர் குறித்த விடுதிகளை சோதனையிட்ட சந்தர்ப்பத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மற்றும் புலிகளுடன் தொடர்புடைய இணையத்தளங்களுக்கு தகவல்களை வழங்கும் நபர்கள் இராணுவ விசாரணைகளை நிறுத்த முயற்சித்துள்ளனர்.
அங்கு நடந்த சகல சம்பவங்களையும் யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள கணனி மூலம் புலிகளின் அணியொன்று வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது எனவும் திவயின கூறியுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire