மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கில் போட்டதை நாடு முழுவதும் உள்ள மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். எனவே ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளிகளையும், பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளையும் உடனே தூக்கில் போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது...
தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருபவர்களையும் நாடு கடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். வைகோ தூக்கு தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று கூறுவது அபத்தமானது.
தீவிரவாதத்துக்கு கடுமையான தண்டனை இருக்க வேண்டும். 2 மணிநேர மின்வெட்டின் காரணமாக தி.மு.க. ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தார்கள். ஆனால் இப்போதுள்ள அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு 20 மணிநேரமாகிவிட்டது.
எனவே ஜெயலலிதா மின் வெட்டு பிரச்சினைக்கு பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டு இருப்பதை நிறுத்தி விட்டு மின்வெட்டை எப்படி போக்குவது என்று யோசிக்க வேண்டும். பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவசாயிகளுக்கு அதிக லாபத்தை தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire