dimanche 18 novembre 2012

பரிதி கொலை வழக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரான்ஸ் பிரிவு தலைவர் விநாயகம் கைது?


பிரான்ஸ் நாட்டில் செயற்பட்டு வருவதாக கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்கப் பிரிவொன்றின் தலைவராக கூறப்படும் விநாயகம் என்பவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 8 ஆம் திகதி பரிசில் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான நடராஜா மதீந்திரனின் கொலை தொடர்பிலேயே விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. பரிதி அல்லது ரீகன் என அழைக்கப்படும் மதீந்திரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டளைத் தளபதிகளில் ஒருவர் என்பதுடன் பிரான்ஸிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளருமாவார். ஐரோப்பாவில் செயற்பட்டு வருவதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகள் வலையமைப்பின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையில் இடம்பெறும் மோதல்களே இக் கொலைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இக்கொலைக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென அவரது மகள் குற்றஞ்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியமை    குறிப்பிடத்தக்கது   எல்லாளன் படை என சந்தேகம்
போட்டி அணிகளுக்கிடையே மோதல்கள் தீவிரம்
எச்சரிக்கைக் கடிதத்தால் வெளிநாட்டுப் புலிகள் நடுக்கத்தில்!
விடுதலைப் புலிகள் நெடியவன் அணி தளபதி பரிதி பிரான்சில் கொல்லப்பட்ட பின், வெளிநாட்டுப் புலி பிரமுகர்களை மிரள வைக்கும் விதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது எல்லாளன் படை. இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டுப் புலிகளின் போட்டி அணிகளுக்கு இடையிலான மோதல்களை நிறுத்திக்கொள்ளா விட்டால், நிர்வாக ரீதியானக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறுகிறது எச்சரிக்கை.
எல்லாளன் படையின் கடும் நடவடிக்கைகள் என்பதன் அர்த்தம், வெளிநாட்டு வீதிகளில் மேலும் சில மரணங்கள் விழலாம் என்பதே! விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் இருந்த காலத்தில், அவர்களால் இயக்கப்பட்ட ஒரு பிரிவு தான் எல்லாளன் படை. விடுதலைப் புலிகள் தமது பெயரில் செய்ய விரும்பாத தாக்குதல்களை எல்லாளன் படை என்ற பெயரில் எச்சரிக்கை விடுத்து நடத்துவது வழக்கம்.
எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்தால், சம்பந்தப்பட்டவர்கள் தலை தப்பாது என்பதும் நடைமுறையாக இருந்து வந்தது. சுருக்கமாகச் சொன்னால் இந்த எல்லாளன் படை, சொன்னதைச் செய்த, செய்யும் ஓர் அமைப்பு.
இறுதி யுத்தத்தின்போது, இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடுகளை அடைந்த புலிகளில் எல்லாளன் படை உறுப்பினர்களும் உள்ளார்கள். இதுவரை அமைதி காத்த அவர்கள், தமது நடவடிக்கைகளை தொடங்கப் போவதாகக் காட்டியுள்ள சிக்னலே, இந்த எச்சரிக்கை. எல்லாளன் படை எச்சரிக்கையில், விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்படுவதால், பிரான்சில் கொல்லப்பட்ட தளபதி பரிதியின் மேற்பார்வையில் இருந்த சொத்துக்கள் இனி யாருடைய கன்ட்ரோலுக்குப் போகப் போகிறதோ, அந்த நபருக்கும் அச் சுறுத்தல் ஏற்படலாம். ஏற்கனவே ஒரு கொலை விழுந்துவிட்ட நிலையில், இந்த எச்சரிக்கை பலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire