mardi 13 novembre 2012

மீண்டும் எல்லாளன் படை....?


விடுதலைப் புலிகள் நெடியவன் அணி தளபதி பரிதி பிரான்சில் கொல்லப்பட்ட பின்,வெளிநாட்டு புலி பிரமுகர்களை மிரள வைக்கும் விதத்தில எச்சரிக்கை விடுத்துள்ளதுஎல்லாளன் படைஇந்த ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு புலிகளின் போட்டி அணிகளுக்குஇடையிலான மோதல்களை நிறுத்திக் கொள்ளாவிட்டால், ‘நிர்வாக ரீதியான கடும்நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என்று கூறுகிறது எச்சரிக்கைஎல்லாளன் படையின் ‘கடும்நடவடிக்கைகள்’ என்பதன் அர்த்தம்வெளிநாட்டு வீதிகளில் மேலும் சில வீர மரணங்கள்விழலாம் என்பதேவிடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் இருந்த காலத்தில்அவர்களால்இயக்கப்பட்ட ஒரு பிரிவுதான் எல்லாளன் படை. விடுதலைப் புலிகள் தமது பெயரில் செய்யவிரும்பாத தாக்குதல்களை ‘எல்லாளன் படை’ என்ற பெயரில் எச்சரிக்கை விடுத்து நடத்துவதுவழக்கம். எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்தால்சம்மந்தப்பட்டவர்கள் தலை தப்பாதுஎன்பதும் நடைமுறையாக இருந்து வந்தது.
சுருக்கமாக சொன்னால் இந்த எல்லாளன் படைசொன்னதை செய்த அமைப்பு.
இறுதி யுத்தத்தின்போதுஇலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடுகளை அடைந்தவிடுதலைப் புலிகளில் எல்லாளன் படை உறுப்பினர்களும் உள்ளார்கள். இதுவரை அமைதிகாத்த அவர்கள்தமது நடவடிக்கைகளை தொடங்கப் போவதாக காட்டியுள்ள சிக்னலேஇந்தஎச்சரிக்கை. எல்லாளன் படை எச்சரிக்கையில்விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுசொத்துக்கள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்படுவதால்பிரான்சில் கொல்லப்பட்ட தளபதி பரிதியின்மேற்பார்வையில் இருந்த சொத்துக்கள் இனி யாருடைய கன்ட்ரோலுக்கு போகப் போகிறதோ,அந்த நபருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம்ஏற்கனவே
 ஒரு கொலை விழுந்துவிட்ட நிலையில்,இந்த எச்சரிக்கையை ஒதுக்கிவிட முடியாது.

Aucun commentaire:

Enregistrer un commentaire