jeudi 8 novembre 2012

வரவு -செலவுத் திட்டம் ஒரே பார்வையில்


2013 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாட்டின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

 பாராளுமன்றில் சமர்ப்பித்து உரைநிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

அவரது உரையின் பிரகாரம் வரவு -செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படுகின்ற விடயங்களை சுருக்கமாகத் தருகிறோம்.
  • 2013 ஆம் ஆண்டு வடக்கில் மாகாண சபைத் தேர்தல்.
  • பாதுகாப்பு பிரிவினருக்காக 3 வருடங்கள் செல்லுபடியாகும் வகையில் நிவாரண வீட்டுக் கடன் வசதி. அதற்கென 2013 வரவு - செலவு திட்டத்தில் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
  • வறிய பிரதேச மாணவர்களுக்காக சத்துணவும் சப்பாத்தும் வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் மாணவர்களுக்கு அரையாண்டுக்கு ஒரு தடவை சீருடை.
  •  சுற்றுலாத்துறை வருமானமாக 2.5 பில்லியன் டொலர் எதிர்பார்க்கப்படுகிறது.
  • வறட்சியினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள் வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடன்கள் பெரும்போகம் வரை நீக்கம். வட்டி முற்றாக நீக்கம்.
  • நீர்ப்பாசன அபிவிருத்திக்காக 102 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • லக் சத்தொச விற்பனை நிலையங்களை ஆயிரமாக அதிகரிப்பதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திக்கு 2000 மில்லியன் ரூபா.
  • சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு ஹெக்ரெயர் ஒன்றுக்கான உதவித் தொகை 3 இலட்சத்திலிருந்து 3 இலட்சத்து 50 ஆயிரமாக அதிகரிப்பு
  • தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய, உற்பத்திகளின் தரத்தை முறையாகப் பேணிய பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு உதவி 
  • ஆடைத் துறையிலிருந்து 5000 மில்லியன் டொலர் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2013 ஆம் ஆண்டில் பொலனறுவை, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடத்தத்திட்டமிட்டுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கு 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
  •  வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்கத் தடை.
  • சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக 125 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
  • கல்வித் துறைக்கு 306 பில்லியன் ரூபா (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 வீதம்) ஒதுக்கீடு.

Aucun commentaire:

Enregistrer un commentaire