samedi 10 novembre 2012

எதிர்க்கட்சிகளின் முயற்சியை முறியடிக்க வேண்டும்: சோனியா


அரியானா மாநிலம் சூரஜ்கண்டில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது.காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தல் அறிக்கையை முழுவதும் பின்பற்ற வேண்டும். பொருளாதாதார நெருக்கடி ஏற்பட்டசிக்கலான நேரங்களில் பிரதமரின் தலைமை நமக்கு உதவியிருக்கிறது. அதில் சில முடிவுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, இதுபற்றி மக்களிடம் நாம் விளக்கி கூற வேண்டியது அவசியம். நமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செய்யும் பிரச்சாரத்திற்கு பதில் கொடுக்க வேண்டும். 

எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முயற்சிகள் செய்து வருகின்றன. அவர்களின் இந்த ஆசை ஜனநாயகம், மதச்சார்பின்மையை வலுவிழக்கச் செய்துவிடும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள கொள்கைகளை மந்திரிகள் செயல்படுத்த வேண்டும். கட்சிக்கும், அரசுக்கும் இடையே தொடர்பை அதிகப்படுத்த வேண்டும். எனவே, கட்சி தொண்டர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்க வேண்டும். 

இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி மற்றும் மத்திய மாநில மந்திரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire