பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளினால் கடந்த ஒன்பது மாதங்களில் 9414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4414 பேர் சிறுவர்களாவர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு' ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,பெண்கள்,சிறுவர்களின் மேம்பாட்டை அடிப்படையாக கொண்டே ஒரு நாட்டின் அபிவிருத்தி மதிப்பிடப்படுகின்றது. பல நாடுகளில் வறுமை 0.1 வீதமே இருக்கின்றது. இங்கு 99.9 வீதம் வறுமை இருக்கின்றது. ஏனைய 0.1 வீதமானவர்களே போஷாக்குடன் வாழ்கின்றனர். அவ்வாறானவர்கள் எந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று இந்த நாட்டு மக்களுக்கு தெரியும்.ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான ஒன்பது மாத காலப்பகுதியில் பெண்கள்,சிறுவர்கள் 9414 பேர் துன்புறுத்தப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்பதற்கு 2013 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தில் ஒன்றுமே இல்லை. இத்திட்டத்தில் பெண்கள் தொடர்பான அமைச்சுக்கு 0.08 வீதமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire