இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது, கொல்லப்பட்ட 40 ஆயிரம் பொதுமக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்கள் குழுவின் தலைவர் மர்சுகி தருஷ்மன் தெரிவித்துள்ளார்.
இன்னர்சிட்டி பிரஸ் நிறுவனத்தின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பொறுப்புக் கூறும் விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ள அவர், இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்ட 40 ஆயிரம் மக்களுக்கு என்ன நேர்ந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் மாத்திரம் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ படங்களும் தம்வசம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அண்மையில் தெரிவித்திருந்தது.
Aucun commentaire:
Enregistrer un commentaire