mercredi 21 novembre 2012

ஒபாமாவின் ஆசை முத்தம்!பரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டின் ஜனநாயக ஆர்வலரான ஆங் சான் சூ கிக்கு வழங்கிய முத்தமானது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வாதிகார ஆட்சியிலிருந்து தற்போது சிறிது சிறிதாக ஜனநாயக நீரோட்டத்தினுள் நுழைந்து வரும் மியன்மாருக்கு ஒபாமா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன் ஓர் அங்கமாக ஆங் சான் சூ கி 15 வருடங்களாக காவலில் வைக்கப்பட்டிருந்த அவரின் வீட்டுக்கு ஒபாமா விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இங்கு உரையாற்றிய ஒபாமா அந்நாட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
மேலும் அவரது விஜயத்தின் முக்கியமாக அமைந்தது ஆங் சான் சூ கிக்கு ஒபாமா வழங்கிய முத்தமாகும்.
தனது நட்பின் அடையாளமாக ஒபாமா வழங்கியதாக கருதப்படும் இம்முத்தமானது சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்தமானது ஊடகங்கள் முன்னிலையில் வழங்கப்பட்டமையானது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire