dimanche 25 novembre 2012

அன்றூ மக்களூக்கு பதில் கூராதவர்  இன்றூ அரசுக்கு பின்நின்றூ பதில் கூறூகிறார் கேபி


'ஏ - 9 வீதியில் இராணுவத்தினர் நகரந்து கொண்டிருந்த போது கௌரவமான யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருந்தன. அதனை புலித் தலைமை புரிந்துகொள்ளவில்லை. 2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் என்னால் யுத்த நிறுத்த நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், ஒஸ்லோ யுத்த நிறுத்த நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் முறியடிக்கப்பட்டது' என்று புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2008ஆம் ஆண்டு புலிகளின் நிலவரத்தை பெரும்பாலானோர் அவதானித்துக் கொண்டிருந்தனர். இராணுவம் மெதுவாக அதுவும் நிச்சயமாக முன்னேறிக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகள் பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.

யுத்தம் ஏ - 9 வீதியில் யாழ்ப்பாணம் - கண்டி வீதிக்கு மேற்காக நகர்ந்தது. அத்தருணத்தில் கௌரவமான யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருந்தன. அதனை புலிகளின் தலைமையினாலும் வெளிநாட்டு அமைப்புகளினாலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி பொதுமக்களையும் தலைமையையும் காப்பாற்ற வேண்டும் என்று கருதினேன். அதற்காக பல நாடுகளின் முக்கியஸ்தர்கள், பிரதிநிதிகள் ஐ.நா.வின் உயர் அதிகாரிகளுடன் போராடிப் பார்த்தேன்.

சர்வதேச அனுசரணையுடன் ஐ.நா. பிரதிநிதிகளிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது என்ற திட்டத்தை உருவாக்கினேன். புலித் தலைவர்களின் குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுக்க மூன்று நாடுகளுடன் பேசியிருந்தேன். இந்தத் திட்டம் நோர்வே உள்ளிட்ட நாடுகளுக்கு தெரிவித்தேன்.

இந்தத் திட்டம் பற்றி குறிப்பிட்டு 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரபாகரனுக்கு கடிதம் அனுப்பினேன். புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் அனுப்பி வைத்தேன். பிரபாகரனோ இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார் அதனையடுத்து நானும் இந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டேன்' அஎன்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire