உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் முல்யானி இன்ட்ராவதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வாறு உதவிகளை வழங்க முடியும் என்பது குறித்து அவர் ஆராய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளின் வரிசையிலிருந்து மத்திய தர வருமானம் ஈட்டும் நாடாக முன்னேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமூக மேம்பாடு மற்றும் சமாதானம் ஆகியனவற்றை மேற்கொள்வதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விஜயத்தின் போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலக வங்கியின் மூன்று முகாமைத்துவ பணிப்பாளர்களில் ஒருவராக இன்ட்ராவதி கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தனியார் முதலீடுகளை மேம்படுத்தல் தொடர்பில் இன்ட்ராவதி கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Aucun commentaire:
Enregistrer un commentaire