mercredi 28 novembre 2012

சந்தர்ப்பவாதிகள் சிங்களவர்கள் என்கிறார் சந்திரிகா!


எனது ஆட்சிக்காலத்தின் போது பல சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்தேன்,  நான் கட்அவுட்களை வைத்து கொண்டு, வீண் கதைகளை பேசி கொண்டிருக்கவில்லை என்பதால், சிலர் என்னை மறந்து விட்டனர். சிங்களவர்கள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப மறந்து விடும் பழக்கம் உள்ளவர்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவை வறுமை காரணமாக ஏற்படுவதில்லை. சமூகத்தின் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளே இதற்கான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹொரகொல்லையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.  தற்போது, உயர்தர வகுப்பில் படிக்கும் பிள்ளைகள் வாரத்தில் சில மணிநேரங்கள் மாத்திரமே பள்ளிக்கு செல்கின்றனர்.  

மீதமுள்ள நேரங்களில் அவர்கள் பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதாக தெரிவிக்கின்றனர்.  நாங்கள் படித்த  காலத்தில் ஆசிரியர்கள் பாடசாலையில் வைத்து கொண்டே எமக்கு கற்பித்தனர். நாங்கள் பகுதி நேர வகுப்புகளுக்கு சென்றதில்லை எனவும் சந்திரிக்கா கூறியுள்ளார்

Aucun commentaire:

Enregistrer un commentaire