vendredi 2 novembre 2012

நியாயம் கிடைக்க வேண்டும் தமிழர்களுக்கு : மல்வத்த மஹாநாயக்க தேரர்


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றியமைக்க வேண்டும். அதேபோல தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கண்டி மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க  திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறைமை பற்றி அமைச்சர் தினேஷ் குணவர்தன மஹாநாயக்க தேரரை இன்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்து தெளிவுபடுத்தினார். இதனை அடுத்து மஹாநாயக்க தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

மஹாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை எமது நாட்டுக்கு உகந்தது அல்ல. நாட்டுக்கு தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது கையிற்கு அது செல்வதை தடுக்க வேண்டும். இந்த நாட்டின் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்காக மாகாணசபை முறையும் தற்போதைய தேர்தல் முறையும் உகந்தது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire