vendredi 23 novembre 2012

பாலியல் வல்லுறவுகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் : கரலியத்த


பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது அதற்கு அதிகமான தூக்குத் தண்டனை விதித்து அது நிறைவேற்றப்படும் என மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இன்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் பதிலளித்து பேசுகையிலேயே திஸ்ஸ கரலியத்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானது அல்ல. எனினும் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, சமூக சேவைகள் அமைச்சு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளிலிருந்தும் எமது அமைச்சுக்கான நிதிகள் வந்துசேரவுள்ளன.

சிறுவர் துஷ்பிரேயோகம் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதுபோன்று வெளிநாடுகளில் தொழில்புரியும் பெண்கள் தொடர்பாக பாதுகாப்பும் கவனமும் செலுத்தி வருகின்றோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire