jeudi 15 novembre 2012

புலிகள் நடத்தியது கொடூரம் என்றால் இலங்கை இராணுவம் நடத்தியதுகோரத்தாண்டவம்.

சுக்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்றுவந்த ஆயுத மோதல் 2009மே 19ஆம் திகதிமுடிவுக்கு வந்ததுபுலிகளின் தலைவர் பிரபாகரன் கொள்ளப்பட்டார்.ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்கள் கொல்லட்டனர்கூடவே ஆயிரக்கணக்கானஅப்பாவித் தமிழ் மக்களும் கொல்லப்பட்டனர்.
இரத்தம் உறைந்து போயிருக்கும் முல்லைத்தீவின் கடற்கரையோரக் கிராமங்களில்இப்போதும் அதாவது யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டபோதும் இரத்தவாடை இன்னும் வீசிக் கொண்டுதான் இருக்கின்றது.
ஆங்கே வீசிக் கொண்டிருக்கும் காற்றில் தமிழர்களின் அபலக்குரல் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றதுயுத்தத்தின் பெயரால் அங்கே நடந்த கொடூரங்களும்,கொலைகளும் ஈடுசெய்யமுடியாதவைஎடுத்துச் சொல்லமுடியாதவை.
புலிகள் நடத்தியது கொடூரம் என்றால் இலங்கை இராணுவம் நடத்தியதுகோரத்தாண்டவம்இந்த இருபத்தியொராம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் மனிதக்கொலைகள் அவை.
ஆண்கள்பெண்கள்பருவவயதினர் முதல் பச்சிளம் குழந்தைகள் பாரபட்சமற்றகொலைகள்நிர்வாணப்படுத்தியும்பாலியல் துன்புறுத்தல் செய்தும்கொத்துக்கொத்தாய் கொண்டு குவிக்கப்பட்ட குருதி வரலாறு அது.
இத்தனையையும் தாங்கிக் கொண்டும் தமிழ் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் இன்னும்இலங்கை மண்ணில் வாழ வேண்டிய கட்டாயத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
எல்லாம் இழந்து தோற்றுப்போன இனமாக தமிழ் மக்கள் இன்று அநாதைகளாகஇருப்பதற்கு தமிழ் மக்களின் மூத்த அரசியல் தலைவர்கள் முதல் காரணம்பின்னர்ஆயுதப்போராட்டத்தில் இறங்கிய சகோதர இயக்கங்களை கொலை செய்தும் தடைசெய்தும் ஏகப்பிரதிநிதித்துவ தலைமை வெறி கொண்டு உரிமைப்போராட்டத்தைதவறான வழி நடத்தி உலகமே அருவருப்போடு பார்த்த பயங்கரவாதமாக்கிய புலிகள்இரண்டாவது காரணம்புலிகள் அழிவு யுத்தம் நடத்துகின்றார்கள்அது சொந்தமக்களையும் கொன்றுஏனைய அப்பாவி மக்களையும் கொன்று தனக்கானபடுகுழியை தாமே தோண்டிக் கொள்ளப்போகின்றது என்று தெரிந்து அதை தடுக்காமல்அதற்து துதி பாடியும்போலிப் புகழாரம் சூட்டியும் உடந்தையாக நின்ற தற்போதையதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் காரணம்.
இப்போது தமிழ் மக்கள்தமது காணிகளையும்வளங்களையும் இழந்து இன்னும்இரண்டாந்தரப்பிரஜைகள்போல் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள்யுத்தவெற்றிக்குப் பின் இலங்கைப்படையினர் கட்டுபாடற்று நடந்து கொள்கின்றனர்.இந்தியா வழங்கிய உழவு இயந்திரங்களில் 90 வீதமானவை படையினரின்பாவனையிலேயே உள்ளதுஇந்தியா வழங்கிய பார ஊர்திகளில் 50 வீதமானதுபடையினரின் பாவனையிலேயே உள்ளதுதற்காலிகமாக படையினர் அமைத்தகாவலரன்களெல்லாம் இப்போது போதுமான காணி அபகரிப்புச் செய்யப்பட்டு பாரியஇராணுவ முகாம்களாக புனரமைக்கப்படுகின்றதுயுத்தகாலத்தில் தமிழ் மக்கள்இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து இராணுவம் பாதுகாப்பு வலையங்களாக வைத்திருந்ததமிழ் மக்களின் காணிகளை திருப்பிக் கொடுக்காமல் தற்போது அபகரிப்புச்செய்துவருகின்றது.
கிளிநொச்சியில் யுத்தத்துக்குப்பின்னர்சொந்த காணியோவீடோ இல்லாமல் சுமார்3000 குடும்பங்கள் தவிக்கின்றனர்அவர்களுக்கு இந்தியா கட்டித் தருவதாகக்கூறியிருக்கும் 50000 வீட்டுத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது வீடு கிடைக்கும்என்று இலங்கை அரசு பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டது.
அதேவேளை சீனா வழங்கிய  25000 உடனடி வீடுகள் பொதுமக்களுக்குபகிர்ந்தளிக்கப்படாமல் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதுகிளிநொச்சியின்காட்டுப்பகுதிகள் படையினரால் துப்பரவு செய்யப்பட்டு படையினருக்கானகுடியிருப்புக்கள் உருவாக்கப்படுகின்றனஇந்த வீடுகளை  9 வீதியால் பயணம்செய்யும் போது பார்க்கமுடியாது.
வீதியிலிருந்து பார்க்கும் போது காடுகளே தெரியும் ஆனால் ஆகாய மார்க்கமாகவிமானப்பயணம் செய்யும்போது படையினரின் திட்டமிட்ட குடியேற்றங்களைக்காணலாம்இது உள்நோக்கம் கொண்ட திட்டமாகும்.
தற்போது இராணுவம் அரச காணிகளையும்தமிழ் மக்களின் காணிகளையும்அபகரித்துவருகின்றதுகுறிப்பாக மக்களிடமிருந்து புலிகள் அபகரித்து வைத்திருந்தகாணிகளை படையினர் அதிகாரத்தோரணையோடு பறித்துவருகின்றதுமக்கள் தமதுஉரித்துக்களைக் காட்டி கேட்கும்போதுபுலிகளுக்கு கொடுத்தீர்கள்புலிகள்பறிக்கும்போது சும்மா இருந்தீர்கள் இப்போது ஏன் உரிமை கொண்டாடுகினன்றீர்கள்.அதைப்போல்தான் இதுவும் என்று படையினர் அச்சுறுத்துகின்றனர்.
புலிகள் நடத்தியது சுத்தமான பயங்கரவாதம் என்பதில் எவருக்கும் இன்னொரு கருத்துஇருக்கமுடியாதுபுலிகளைப்போலவே இப்போது படையினரும் நடந்துகொள்கின்றனர் என்றால்இலங்கைப்படையினரும் பயங்கரவாதம் புரிகின்றனர்.
படையினரின் பயங்கரவாத்துக்கு துணைபோகவும்இராணுவத்தின் இரும்புச்செருப்புக்கீழேயே தமிழ் மக்கள் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தை அடைவதற்குதோதாகவே வடக்குக்கும்கிழக்குக்கும் ஆளுனர்களாக படை உயர் நிலைஅதிகாரிகளை இலங்கை அரசு நியமித்துள்ளதுகிழக்கின் ஆளுனர் கடற்படைஅட்மிரல்வடக்கின் ஆளுனர் இராணுவ மேஜர் ஜென்ரல்வடக்கில் ஆளுனர்படையினரின் அத்தனை அடாவடித்தனங்களையும் மூடி மறைப்பதிலும்,படையினரின் கட்டமைப்புகளை வலுவாக புனரமைப்பதிலும் தீவிரமாகசெயலாற்றிவருகின்றார்.
இன்னும் ஒரு படி மேலதிகமாகப்போய் தற்போது இராணுவத்துக்கு காணிகளைஅபகரித்துக் கொடுப்பதிலும் ஈடுபட்டுள்ளார்படையினர் கையைக் காட்டும்காணிகளை உடனடியாகவே ஒதுக்கி வழங்கிவிட வேண்டும் என்று வடமாகாணத்தின்அத்தனை அதிகாரிகளையும் மிரட்டல் பாணியில் அனுகுவதில் வடமாகாண ஆளுனர்ஜீ.சந்திரசிறியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.
தமிழ் மக்களிடம் பயங்கரவாதம் புரியும் படையினரை போற்றிப்புகழும் இலங்கைஅரசும் அரச பயங்கரவாதம் புரின்றதுஆகையாலையே இப்போது இலங்கையில்சிங்கள இனவாதம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளதுஅது தமிழ் மக்களைமட்டுமல்hதுஇன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களையும் அச்சுறுத்தத்தொடங்கியுள்ளது.
இதன் வளர்ச்சிப்போக்குத்தான் தமிழ மக்களின் கோயில்களை உடைப்பதும்அந்தஇடங்களில் முடியுமானவரை பௌத்த கோயில்களை அமைப்பதும்முஸ்லிம்பள்ளிவாசல்களை உடைக்க பிக்குகளே கம்பிகளோடு வீதியில் இறங்கி தலைமைதாங்குவதுமாகும்.
யுத்த வெற்றி மமதையில் சிங்கள அரசும் அதன் படைகளும் கட்டுப்பாடற்று நடந்துகொள்ளும்போதுஇவர்களின் அடிவேர்களாக இருக்கும் சிங்கள இனவாதிகளுக்குச்சொல்லியா கொடுக்கவேண்டும்.
சிங்களப்படைகளின் கொலை வெறி எத்தகைய அசிங்கமானதுதமிழ் இனம்திட்டமிட்டு எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது வெளியிலேயே வராது என்றுஇருந்தவர்களுக்கு தற்போது வெளிவரும் கொலை ஆதாரங்கள் நிச்சயம் நடுக்கத்தைக்கொடுத்திருக்கும்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவும்கௌரவமானவாழ்வுக்காகவும் போராட வேண்டியவர்கள் புலம் பெயர்ந்துவாழும் தமிழ்உறவுகள்தான்.
அந்தப்போராட்டம் உலக ஊடகங்களையும்இராஜதந்திர முற்போக்குச்சிந்தனையாளர்களையும் ஈர்க்கின்றவகையில் திட்டமிடப்படவேண்டும்தமிழ்மக்களின் நியாயம் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவுபடுத்தப்படுவதற்கானபோராட்டம் அவசியம்.
ஆயுதங்களைவிடவும்இனி தமிழன் அறிவை ஆயுதமாகப் பயன்படுத்தவேண்டும்.இதற்கு முதலில் புலம் பெயர்ந்து வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனமும்ஒற்றுமைப்படுத்தப்பட வேண்டும்அது நடந்தால் சிங்களப்படைகளை விடவும்பத்துமடங்கு பலமானதாக அமையும்.
மண்ணிலிருந்து
சகோதரன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire