vendredi 9 novembre 2012

தளபதி பரிதி பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டு

விடுதலைப்புலிகளின்  மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி றீகன் என்று பல்வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்படும் நடராசா மதீந்திரன் அவர்கள்   பாரிஸ் நகரில் 341 rue des Pyrénées  எனுமிடத்தில் உள்ள தமிழர் ஒருக்கினைப்பு குழு அலுவலக வாசலில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாரிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்,கடந்த வருடமும் இதே காலப்பகுதியிலேயே பரிதி பிரான்சில் வைத்து கத்திக் குத்துக்குள்ளானார்.

இரவுவேளை இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.


.மாவீரர் வியாபாரம் தொடர்பான பிணக்குகள் உச்ச கட்டம் அடைந்திருக்கும் நிலையில் இப்படுகொலை இடம்பெற்று இருக்கிறது.நெடியவன் குழு,விநாயகம் குழு ,உருத்திர குமார் குழு  என பல குழுக்கள் போட்டி போட்டு கொண்டு மாவீரர் வியாபார போட்டியில் ஈடுபட்டிருக்கின்றன. இவற்றுள் எந்த குழு இந்த படு கொலையில் சம்பந்தபட்டது என்பது விரைவில் வெளியாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire