mardi 20 novembre 2012

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை நாடுகளை குறிவைக்கிறது சிறிலங்கா –

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கசகஸ்தானுக்கு இன்று திங்கட்கிழமை மாலை சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரை கசகஸ்தான் அஸ்டானா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் மற்றும் கசகஸ்தானுக்கான இலங்கை தூதுவர் உதயாங்க வீரதுங்க ஆகியோர் வரவேற்றனர். 
கடந்த திங்களன்று நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்சபையில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான உறுப்பு நாடாக கசகிஸ்தான் தெரிவு செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதத்துக்குப் பின்னர், ஆபிரிக்க நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் சிறிலங்கா இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. 
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் மற்றொரு நாடான உகண்டாவின் அதிபர், கடந்தவாரம் கொழும்பு வந்திருந்தபோது, சிறிலங்கா அரசாங்கம் 1.5 மில்லியன் டொலர் நன்கொடையை உகண்டாவுக்கு வழங்க முன்வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire