vendredi 23 novembre 2012

இந்திய அரசு!கடும் அதிர்ச்சியில் இலங்கை செய்மதிக்கு சீன உதவி;

 இலங்கை தனது முதலாவது செய்மதியை விண்ணுக்கு அனுப்புவதற்கு சீனாவின் ஒத்துழைப்பைப் பெற்றிருப்பது இந்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக உயர்மட்ட இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றிரவு "சுடர் ஒளி'யிடம் தெரிவித்தன.
 
சுப்ரீம் செட்  1 என்ற இலங்கையின் முதல் செய்மதியை விண்ணுக்கு அனுப்புவதற்கு இலங்கை சீனாவின் உதவியைப் பெற்றிருப்பது பாதுகாப்பு ரீதியில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து இந்திய பாதுகாப்புத்துறை உடனடிக் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
 
முன்னதாக இந்தச் செய்மதி நேற்றுமாலை விண்வெளிக்கு அனுப்பப்படவிருந்தபோதும் காலநிலை மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணத்தினால் அதனை அனுப்ப ஐந்து நாட்கள் தாமதமாகுமென்று நேற்றுக்காலை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சீனாவுடன் இலங்கை நெருக்கமாக செயற்பட்டு வருவதை இந்தியா நீண்டகாலம் அவதானித்து வந்தபோதும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு இந்தியாவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து புதுடில்லி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இப்போது வந்திருப்பதாக இந்தியாவின் மூத்த இராஜதந்திரியொருவர் குறிப்பிட்டார்.
 

Aucun commentaire:

Enregistrer un commentaire