இங்கு வருகை தந்துள்ள ஜப்பான் முதலீ்ட்டாளர்கள் கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர றிசாத் பதியுதீனை சந்தித்து உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளனர்.
நெல்லினை அரிசியாக மாற்றும் போது அதிலிருந்து வெளியாகும் உமியினை கொண்டு மீள் சக்தி உற்பத்தியினை செய்வது குறித்து தாங்கள் தமது கவனத்தை செலுத்தவுள்ளதாகவும்,அதன் மூலம் சூழலுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களையும் தடுக்க முடியும் என்றும் ஜப்பானிய தூதுக் குழுவினர் அமைச்சரிடத்தில் சுட்டிக்காட்டினர்.
ஜப்பான் நாட்டில் தற்போது இந்த முறை பயன்படுத்தப்படுவதாகவும்,ஜரோப்பிய சந்தையில் தமது உற்பத்திகள் கவரப்பட்டுவருவதாகவும் முதலீட்டுக் குழுவினர் அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் எடுத்துரைத்தனர்.
குறிப்பாக இலங்கையில் இவ்வுற்பத்திக்கான மூலப் பொருள் காணப்படுவதாகவும் அதனை இங்கு உற்பத்தி செய்வது குறித்து தாங்கள் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள் இதன் மூலம் எரிபொருள்,மற்றும் மின்சாரம் என்பனவற்றின் செலவீனங்களை குறைக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire