யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 மாணவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், வீதியிலிறங்கி ஊர்வலம் செல்ல முற்பட்டதை அடுத்தே அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர் என்று யாழ். பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா – தெரிவித்தார்.
பேரணியில் ஈடுபட முயற்சித்தவர்களை பொலிஸார் கலைக்க முற்பட்ட போது அதற்கு செவிசாய்க்காத மாணவர்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டனர். இதனால் அவர்களை பலவந்தமாக விரட்டியடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.
இதேவேளை, மாணவர்களைக் கலைப்பதற்காககச் சென்ற பொலிஸாரின் ஒத்துழைப்புக்காகவே இராணுவமும் அப்பகுதிக்குச் சென்றது என்று யாழ். இராணுவ தலைமையகம் - கூறியது.
Aucun commentaire:
Enregistrer un commentaire