jeudi 15 novembre 2012

ஐநா அறிக்கை வெளியிடப்பட்டது


இலங்கையில் நடந்து முடிந்த போரின் இறுதிக்கட்டத்தில், ஐநா மன்றம் செயல்பட முடியாமல் தோல்வியடைய வழி வகுத்த, 'அமைப்பு சீர்குலைவு' மீண்டும் ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று தனக்கு ஆலோசனை கூற ஐ.நா மன்றத் தலமைச் செயலர் பான் கி மூன், குழு ஒன்றை நியமித்திருக்கிறார்.
ஐ.நா மன்றம் இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் சாதாரண பொதுமக்களைப் பாதுகாக்க தனக்கு இருந்த ஆணையை நிறைவேற்றத் தவறியது குறித்த விவரங்கள் அடங்கிய உள்ளக விசாரணை அறிக்கையை ,தலைமைச் செயலர் பிரசுரித்து விட்டார் என்று அவருக்காகப் பேசவல்ல ஒரு அதிகாரி கூறினார்.
இந்த அறிக்கை, உயிர்ச்சேத விவரங்களை ஐ.நா மன்றம் வெளியிடத் தவறியது, மற்றும் பொதுமக்கள் கொலைகளுக்கு அரசாங்கத்துக்கு இருந்த பொறுப்பு ஆகியவைகளையும் விவரிக்கிறது.
ஐ.நா மன்றம் இந்த சம்பவத்திலிருந்து பொருத்தமான பாடங்களைப் பெறவேண்டும், மோதல் பகுதிகளில் உதவியை நாடும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற தன்னாலான அனைத்தையும் செய்யவேண்டும் என்று தலைமைச் செயலர் பான் கி மூன் உறுதியுடன் இருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire