dimanche 18 novembre 2012

டெசோ மீண்டும் கூடுகிறது


திராவிட முன்னேற்ற கழகத்தின் டெசோ அமைப்பின் பிறிதொரு கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக, சென்னையில் கடந்த  ஆகஸ்ட் மாதம், 12 ம் திகதியளவில் ‘டெசோ’ மாநாடு நடந்தது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மனுவுடன் அண்மையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் ஸ்டாலின் தலைமையிலான் குழு ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளிடம் கையளித்தது.
நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை துணை பொதுச்செயலர், ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையக தலைவர் ஆகியோரிடம், டெசோ தீர்மானங்கள் கையளிக்கப்பட்டிருந்தன.
அடுத்தக் கட்ட நடவடிக்கைகள், போராட்டங்கள் குறித்து விவாதிக்கவும், டெசோ கலந்துரையாடல் கூட்டம், நாளை திங்கட் கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ளது.
இதனிடையே. இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் இந்தியா அதனை மீண்டும் ஆதரிக்கும் என்று சென்னை வானூர்தி நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.கருணாநிதியை இந்திய பாதுகாப்பு சட்டமூலத்திற்கமைய கைது செய்ய முடியும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையில் நிலவும் ராஜதந்திர உறவினை பாதிப்படைய வைக்கும் முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகின்றமையே இதற்கான காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire