பலஸ்தீன முன்னாள் தலைவர் யாசிர் அரபாத்தின் உடல் சோதனைக்காக இம்மாத இறுதியில் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பலஸ்தீன நிர்வாக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
யாசிர் அரபாத்தின் மரணம் குறித்து சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடத்திவரும் பிரான்ஸ், மேலதிக விசாரணைக்காக தமது விசாரணைக் குழுவை பலஸ்தீனத்திற்கு அனுப்பவுள்ளது.
இந்த விசாரணைக்குழு நவம்பர் 24 முதல்26ஆம் திகதிக்குள் மேற்குக்கரை நகரான ரமல்லாவை சென்றடையவுள்ளது. அதேபோன்று இந்த விவகாரம் குறித்து வேறாக விசாரணை நடத்தும் சுவிட்சர்லாந்து விசாரணைக்குழுவும் அதே தினத்தில் ரமல்லாவை சென்றடையவுள்ளது.
இந்நிலை குறித்த காலப் பிரிவில் அரபா த்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு சோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த சோதனை ரகசியமாகவே இடம்பெறும் என நம்பப்படுகிறது.
கடந்த 2004ம் ஆண்டு பிரான்ஸ் இராணுவ மருத்துவமனையில் மரணமடைந்த யாசிர் அரபாத்தின் உடைமைகளில் அண்மையில் பொலொனியம் -210 என்ற கதிரியக்கம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire