vendredi 2 novembre 2012

டக்ளசின் தலையீடு. கையை பிசைகின்றார் அரசரெட்ணம்.


யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள 5 வெற்றிடங்களுக்கு அண்மையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் குவிந்துள்ள நிலையில் 5 வெற்றிடங்களுக்குமான சிபார்சு அமைச்சர் டக்ளஸிடமிருந்து சென்றுள்ளதாகவும், இச்சிபார்சு உபவேந்தர் அரசரெட்ணம் அம்மையாரை சிக்கலில் தள்ளியுள்ளதாகவும் யாழ் பல்கலைக்கழக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. 

டக்ளசினால் சிபார்சு செய்யப்பட்டுள்ளவர்கள் வேண்டப்பட்ட தகமைகளை பூர்த்தி செய்யாதவர்கள் என யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மட்டத்தில் அதிருப்தி கிளம்பியுள்ளதாகவும் விரிவுரையாளர்களின் அதிருப்தியை கணக்கிலெடுக்காமல் நியமனங்கள் வழங்கப்படுமாயின் அதற்கு எதிரான போராட்டம் ஒன்றில் குதிப்பதற்கு விரிவுரையாளர்கள் சங்கம் தயாராகி வருவதாகவும் இலங்கைநெற் அறிகின்றது.

Aucun commentaire:

Enregistrer un commentaire