2012ம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.6 மில்லியன் (16 இலட்சம்) லீற்றர் மதுபானம் (சாராயம்) யாழ்.மாவட்ட மக்களால் நுகரப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். புகைத்தல் மற்றும் மதுப் பழக்கத்துக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். “இது யாழ்ப்பாணத்தில் சராயம் அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றது. பதின்ம வயதினரும், பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதத் தயாராகும் மாணவர்களும் சாராயம் அருந்துவது அதிகரித்துள்ளது. 2007ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிபரத்தின் படி யாழ்.மாவட்டத்தில் 27 சதவீதமானோர் புகைப்பழக்கமுடையவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புகைத்தலினால், 15 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் பேர் வரை மோசமாக பாதிக்கப்படுகின்றனர்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். |
samedi 3 novembre 2012
16 இலட்சம் லீற்றர் சாராயம் விற்பனை ஆறு இலட்சம் பேர் வசிக்கும் யாழ்ப்பாணத்தில்
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire