samedi 3 novembre 2012

இலங்கை தமிழர் பிரச்னையில் விரைவான அரசியல் தீர்வு தேவை - இந்தியா


இலங்கை தமிழர் பிரச்னையில் விரைவான அரசியல் தீர்வு தேவை என ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கை வடக்கு மாகாணத்தில் விரைந்து தேர்தல் நடத்தவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி நம்ப தகுந்த விசாரணை தேவை என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. தமிழர் பிரச்னைக்கு விரைவான அரசியல் தீர்வு காண்பதே நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் என்றும் கூறியுள்ள இந்தியா,போரின்போது அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றி உரிய விசாரணைதேவை என்றும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு மீதான விசாரணைக்கு காலவரையறை தேவையென்றும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழர் பகுதிகளில் தனியார் நிலத்தை ராணுவம் திரும்ப ஒப்படைக்கவும்,அதே போல் ராணுவ உயர் பாதுகாப்பு வலையங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire