samedi 3 novembre 2012

நடிகை ஐஸ்வர்யா ராயுக்கு பிரான்ஸின் கலைத்துறைக்கான செவாலியர் உயரிய விருது

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயுக்கு பிரான்ஸின் கலைத்துறைக்கான செவாலியர் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

செவாலியர் விருது, பிரான்ஸில் சிவிலியனுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருது ஆகும். 

இதனை பிரான்ஸ் அரசு சார்பில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதுவர் பிரான்ஸுவாஸ் ரிசியெர் அறிவித்தார். 

உலக சினிமா மற்றும் இந்திய - பிரெஞ்சு சினிமா இடையில் நல்லுறவை வளர்த்தெடுக்கும் முகமாக சினிமா, கலை, கலாச்சாரம் போன்ற துறைகளில் ஐஸ்வர்யா ராயின் அர்ப்பணிப்பு பணிகளை நினைவுகூர்ந்து இவ்விருது வழங்கப்படுகிறது. 

இதற்கு முன்பு, பாலிவுட் நடிகர் ஷாருகான், ரகு ராய், நந்திதா தாஸ், ஹாபிப் தன்வீர் மற்றும் உம்ப்மன்யு சட்டர்ஜீ போன்ற இந்திய கலைஞர்கள் ஏற்கனவே இவ்விருதை பெற்றுள்ளனர். 

இந்தியாவின் பத்மசிறீ விருதினை பெற்ற இளவயது நடிகை எனும் பெருமை பெற்றவர் ஐஸ்வர்யா ராய். 

கடந்த 2002ம் ஆண்டு அவர் நடித்த தேவதாஸ் திரைப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு இந்திய தெரிவாக அனுப்பிவைக்கப்பட்டது. 

பிரான்ஸ் மக்களால் அதிக பாராட்டுக்களை இத்திரைப்படம் பெற்றது. கேன்ஸ் திரைப்பட விழா நடுவர் குழுவில் இடம்பெற்ற முதல் இந்திய நடிகை எனும் பெருமையும் ஐஸ்வர்யா ராயை சாரும். 

 ஐஸ்வர்யா ராயின் பிறந்த தினம் என்பதால், அன்றைய தினம் அவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire