mardi 6 novembre 2012

திருத்த வேண்டும் அரசியலமைப்பை - சோபித்த தேரர் கோரிக்கை


நாட்டில் தோன்றியுள்ள பல குழப்பங்களின் மூல காரணங்களான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை, விருப்பு வாக்குமுறைமை மற்றும் வேறு யாப்பு திருத்தங்களை ரத்து செய்யும்வகையில் அரசியலமைப்பை திருத்த வேண்டுமென கோரியுள்ள வண.மாதுலவாவே சோபித்த தேரர், அரசியலமைப்பைத் திருத்துமாறு அதிகாரப் பீடத்திடம் மக்கள் கோர வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆட்சி முறையில் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை என்பன இல்லாத காரணத்தால் குற்றச்செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் என்பன அதிகரித்து வருவது காணக்கூடியதாக உள்ளது என சம அந்தஸ்துகொண்ட சமூகத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதனை அரசாங்கத்தினால் செய்யமுடியாதென்றால் அதனை மக்கள்தான் செய்ய வேண்டும்.
ஜனநாயகத்தையும் நீதியையும் உறுதிப்படுத்துவதற்கு மக்கள் முன்வந்து உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சுதந்திரமான நீதித்துறை, சுதந்திரமான வாக்களிப்பு, சுதந்திரமான பொலிஸ் என்பவை இந்நாட்டில் இல்லை.
மக்கள் நீண்டகாலமாக அமைதியாக இருந்துவிட்டனர். இந்நிலையில், அரசியலமைப்பை மாற்றவேண்டுமென குரல் எழுப்புவதற்கான காலம் கனிந்துள்ளது என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire