mardi 6 novembre 2012

வெறுமனே ஓர் கெரில்லா போராட்ட இயக்கமாக கருத முடியாது புலிகளை !– மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க

தமிழீழ விடுதலைப் புலிகளை வெறுமனே ஓர் கெரில்லா போராட்ட இயக்கமாக கருத முடியாது என முல்லைத்தீவு 68ம் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.

   வலுவான சர்வதேச வலையமைப்பைப் கொண்டதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட ஓர் தீவிரவாத இயக்கமாக புலிகளை நோக்க வேண்டும்.

   போர் சூனிய வலயத்திலிருந்து தாக்குதல்களை மேற்கொண்டு பொதுமக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்த வேண்டுமென்ற நோக்கில் இறுதிக்கட்ட போரின் போது புலிகள் சூழ்ச்சித் திட்டம் தீட்டினர்.

   எனினும், இதனைப் புரிந்து கொண்ட படையினர் போர் சூனிய வலயத்தின் மீது தாக்குதல்களை நடத்தவில்லை.

   படையினர் பதில் தாக்குதல் நடத்தாது பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர் என மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire