lundi 5 novembre 2012

4 பேரின் சடலங்கள் மீட்ப்பு: 3 பேரைப் பொலிசார் கைதுசெய்துள்ளனர் !


காலியில் நேற்று மீடகப்பட்ட நான்கு சடலங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கை, கால்கள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் துப்பாக்கி சுட்டு காயங்களுடன் இந்த நான்கு சடலங்களையும் வல்பிட்டவத்த, பொட்டால எனும் பிரதேசத்தில் பொலிஸார் நேற்று மீட்டனர். இக் கொலைகள் எவ்வாறு இடம்பெற்றது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்த பொலிசார் சந்தேகத்தின் பேரில் இதுவரை மூவரைக் கைதுசெய்துள்ளனர்.

கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் இச் சடலங்களைப் பிரதப்பரிசோதனைக்காகப் பொலிசார் அனுப்பிவைத்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது. இக் கொலைகளுக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கும் தொடர்பு இருக்கலாம் என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire