lundi 5 novembre 2012

ஆயுதப்போராட்டம் மீண்டும் வெடிக்கும் – டி.ஆர்.கார்த்திகேயன் எச்சரிக்கை

சிறிலங்காவில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படா விட்டால் அங்கு மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்கும் என்று- ராஜிவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுத் தலைவரான முன்னாள் புலனாய்வு அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவில் உள்ள சிறுபான்மை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் காரணமாகவே அங்கு போராளிகள் உருவாகினர்.

பெரும்பான்மை இன சிங்களவர்கள் அடக்குமுறை செய்த காரணத்தால் வேறுவழியின்றியே தீவிரவாத இயக்கமாக அவர்கள் மாறினர்.

அங்குள்ள தமிழர்களுக்கு இன்னும் நியாயம் வழங்கப்படவில்லை.

அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க ராஜிவ் - ஜெயவர்த்தன உடன்பாட்டை நிறைவேற்ற வேண்டும்.

விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டுள்ளதால் தற்போதைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

சிறிலங்காவில் அடக்குமுறையினால் தான் அமைதி ஏற்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பபடா விட்டால் மீண்டும் ஆயுதப்போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளது.

தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்க இந்தியா அனைத்துலக அளவில் சிறிலங்காவை நிர்ப்பந்திக்க வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire