lundi 5 novembre 2012

மஹிந்தருக்கு ஆசிவேண்டி வன்னியிலே கோயில் கட்டும் சிறிதரன் எம்பி.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று 7 வருடங்கள் நிறைவடைவதை முன் னிட்டும் ஜனாதிபதியின் 67ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் நாடு முழுவதிலும் சகல சமய வழிபாடுகளை 'கிருவாபத்துவென்தல் அருணட்ட' என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள சகல மாவட்டங்களிலும் சர்வ சமய வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் மக்களின் சமய வழிபாட்டுக்காக முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில் களை புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மல்லாவி நான்காம் யூனிற் முருகன் ஆலயம் மற்றும் யோகபுரம் சிவன் ஆலயத்தில் இறைவிக்கி ரகங்களை பிரதிஷ்டை செய்வதற் கான அடிக்கல் நாட்டு வைபவங்கள் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் அப்பகுதி வர்த்தகர்கள், அடியார்களின் துணையுடன் நல்லை ஆதினகுரு முதல்வர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட தமிழத் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் மற்றும் பாண்டியன் குளம் பிரதேசசபையின் தலைவர் தனிநாயகம், உப தவிசாளர் செந்தூரன் மற்றும் துணுக்காய் பிரதேசசபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆசி வேண்டியிருந்தனர். 

மேலும் வன்னியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதிக்கான ஆசிவேண்டும் நிகழ்வுகளை தன்னால் ஒருங்கிணைத்து நாடாத்த முடியும் எனவும் அவ்வாறான நிகழ்வுகளில் மாற்றுக்கட்சிக்காரர் கலந்து கொள்ளக்கூடாது எனவும் நிகழ்வுகளை தேசிய ஊடகங்களில் பிரசுரிக்க கூடாது எனவும் சிறிதரன் நிபந்தனை விதித்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. 

நிகழ்வுகள் தேசிய ஊடகங்களில் பிரசுரமாகும் போது தனது போலி தமிழ் தேசியம் தவிடு பொடியாகிவிடும் எனவும் அவர் கூறியுள்ளார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire