நைஜீரியாவில் மைதுகுரி என்னும் பகுதிகளில் பொகோ ஹராம் என்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு இத்தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர் நடத்தியத் தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோரை கொன்றுவிட்டதாக மக்கள் கூறியுள்ளனர். ஒரே தெருவில் 4 மகன்கள் உட்பட 11 பேரை கொன்றதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இறந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் இப்பகுதியில் இருந்த முன்னாள் ராணுவதளபதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு பொகோ ஹராம் தீவிரவாதக்குழு காரணமாக இருக்கலாம் என்று கருதி ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த போராடி வரும் தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு மனித உரிமை மீறலை அரங்கேற்றி வருவதாக பன்னாட்டு பொதுமன்னிப்பு நிறுவனம் குற்றம் சாட்டி வருகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire