vendredi 1 février 2013

ஏசுபிரானா?” - ‘உலகநாயகன்’ சர்ச்சை!

கமலின் விஸ்வரூபம் படம் குறித்த சர்ச்சை நாடு முழுவதும் பேசப்படும் ஒன்றாகிவிட்டது. கமல் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துவிட்டதாகக் கூறி வழக்கு நடந்துவருகிறது. இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் விஸ்வரூபம் படத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றன. 

இந்நிலையில் கிறித்துவ மதத்தைச் சார்ந்த வசீகரன் என்ற நபர் தலைமைச் செயலாளரை சந்தித்து கமல்ஹாசன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் ” கமல்ஹாஸன் இனி ‘உலகநாயகன்’ என்ற  பெயரை உபயோகப்படுத்தக்கூடாது. ‘உலக நாயகன்’ என்ற பெயர் பிரபஞ்சத்தைக் காக்கும் ஏசு கிறிஸ்துவின் பெயர். 

கமல் ஏசு பிரானின் பெயரை தனக்கு வைத்துக்கொள்வது ஏசு நாதரை இழிவுபடுத்துவது போல் உள்ளது” என்று கூறியிருக்கிறார். மேலும் இதை தலைப்புச் செய்தியாக போடும்படி அவரே பத்திரிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டது மேலும் சிறப்பான விஷயம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire