இன்று முதலாம் திகதி முதல் பிச்சையெடுப்பது, விற்பனைகளில் ஈடுபடுவது, பிரசாரம் செய்வது, பாடுவது, உண்டியல் குலுக்குவது அனைத்தும் தடை செய்யப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்தார். பயணிகளுக்கு உண்டாகும் அசெளகரியங்களை தவிர்க்கும் வகையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் பயணிகள் இது குறித்து தொடர்ந்தும் வலியுறுத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இன்று முதல் இத்தடையை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் பிரகாரம் பஸ்ஸினுள் பிச்சை எடுப்பது, நிதி சேகரிப்பது, பாடுதல், பிரசாரம் செய்தல், விற்பனை செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் பிச்சை எடுத்து வந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு- நீர்கொழும்பு புகையிரதத்தில் குறித்த பெண் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பெண்ணைக் கைது செய்யும் போது அவரிடம் 1800ரூபாய் வரை இருந்ததாகவும், அப்பணம் ஒரு மணித்தியாலயத்தில் பிச்சை எடுத்து உழைத்த பணம் எனவும் புகையிரதத் திணைக்கள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது வயிற்றுப் பகுதியிலுள்ள கட்டியைக் காட்டி மக்களிடம் அனுதாபத்தினைப் பெற்றே பிச்சை எடுத்து வருவதாகவும் அவருக்கு இரண்டு பிள்ளைகளின் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் களனி விஹாரையில் போயா தினமொன்றில் 9000 ரூபாவிற்கு மேல் சம்பாதிப்பதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire