samedi 18 janvier 2014

2 ஆண்டுகளில் 400 பாதிரியர் நீக்கம் சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில்

சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாதிரிமாரிலும் பார்க்க இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகரிப்பு என்று கருதப்படுகிறது.
ஜெனீவாவிலுள்ள ஐநா ஆணையத்தின் முன்பாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆஜரான வத்திக்கான் அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த ஆவணங்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன.
பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பவங்களை மட்டுமே வத்திக்கான் திருச்சபை இதுவரை அறிக்கையிட்டுள்ளது.
பாதிரிமாரின் பாலியல் துஷ்பிரயோக விவகாரங்களை கத்தோலிக்க திருச்சபை தலைமை மூடிமறைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிவில் அதிகாரிகளுக்கு முறையிடாமல், சம்பந்தப்பட்ட பாதிரிமாரை வேறு கத்தோலிக்க பங்குப் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் வத்திக்கான் மீது விமர்சனங்கள் உள்ளன.                                                                 இத்தாலியில் கன்னிகாஸ்திரீ ஒருவருக்கு குழந்தை பிறந்திருப்பதாக இத்தாலிய ஊடகங்கள் கூறுகின்றன.தாயான கன்னிகாஸ்திரீ (பழைய படம்)

இத்தாலியின் மையப்பகுதி நகரான ரியெட்டியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
எல் சால்வடோரைச் சேர்ந்த இந்த 32 வயது கன்னிகாஸ்திரீ,தான் கர்ப்பமாக இருப்பதாக தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று கூறினார்.
தனக்கு வயிற்று வலி வந்திருப்பதாகக் கருதி அவர் கூறியபிறகு, அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு அவர் பிரான்சிஸ் என்று பெயரிட்டிருக்கிறார்.

தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire