mercredi 29 janvier 2014

நாட்டின் உயிர் வாழும் ஒரே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

மிதவாத கொள்கைகளை உடையவர்கள் கருத்துக்களை வெளியிட அஞ்சுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மிதவாத கொள்கையுடையோர் கருத்துக்களை வெளியிட அஞ்சுகின்றனர் – சந்திரிக்கா
கொலை செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சம், அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் காரணமாக மிதவாத அல்லது நடுநிலையான கொள்கைகளை உடையவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளியிடுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாறாக கடும்போக்குவாதிகளே தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் இதனையே மக்கள் செவிமடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக தாம் அமைதி பேணி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஏதெனும் ஓர் விடயம் குறித்து கருத்து வெளியிட்டால், தமக்கு எதிராக அரசாங்க ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களையும் சேறு பூசல்களையும் கட்டவிழ்த்துவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை கிடையாது என அரச ஊடகங்கள் தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், நாட்டின் உயிர் வாழும் ஒரே முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியிலும், மூத்த பிரஜை என்ற ரீதியிலும் சில விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் திட்டம் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு சிலர் அழைத்த போதிலும் தாம் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire