mercredi 29 janvier 2014

ஏழைப் பெண்ணுக்கு உதவுவதற்காக 90 வயதுடைய ராதாகிருஷ்ணன் திருமண பந்தம்

90 வயதுடைய ராதாகிருஷ்ணன் 60 வயதுடைய ராதா என்ப வரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தத் தகவல்கள் படிப்பவர்களுக்கு ஆச்சரியமளிக்கக் கூடும். ஆனால், திரும ணத்தின் பின்னணி, மாப்பிள்ளையைப் பொருத்தவரை மிகவும் கொள்கைப்பிடிப்புக்கானது.

மாப்பிள்ளைக்கு வயது அதிகமில்லை. சதமடிக்க இன்னும் 10 ஆண்டுகள்தான் பாக்கி. மணமகளும் 60 ஐக் கடந்தவர்தான். ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் வயநாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். கதராடையில் மணக் கோலம் கண்டிருக்கிறார் ராதாவுக்கு தன்னைவிட 30 வயது மூத்த புதியதோர் உறவு கிடைத்திருக்கிறது.

5 பேர் கொண்ட குடும்பத்தில் மூத்தவராகப் பிறந்தவர் ராதா. தங்கைகளுக்கு திருமணமாகிவிட்டது. பெற்றோர் இயற்கையெய்தி பின்னர் தனி மரமாகவே இருந்தார் ராதா. ராதாகிருஷ்ணனின் மூத்த மனைவி இறந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. நண்பர்கள் மூலம் இந்தத் திருமண பந்தம் ஏற்பட்டதாம்.

ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஓய்வூதியம் வருகிறது. அவரின் மறைவுக்குப் பின், ஏழைப் பெண் ஒருவருக்கு அந்தத் தொகை கிடைக்க வேண்டும் என விரும்பினார். சட்டரீதியான நடைமுறைகளுக்காக இத்திருமணம் நடைபெற்றது' என்றார் ராதா.

ராதாகிருஷ்ணனின் முதல் மனைவிக்குப் பிறந்த 5 வாரிசுகளும் திருமணத்துக்கு வரவில்லை. திருமண பந்தம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்படக்கூடும். அது ஒரு ஏழைப் பெண்ணுக்கு உதவுவதற்காகக் கூட இருக்கலாம் என 90 வயதுடைய ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Aucun commentaire:

Enregistrer un commentaire