mardi 27 mai 2014

இந்திய விமானப்படைக்கு சொந்தமான 'எம்.ஐ.ஜி. 21' ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி பலி

இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கி பைலட் சாவுகாஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் பிஜ்பேஹாரா பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக்-21 விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில், விமானத்தின் விமானி ரகு பன்ஸி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. விபத்துக் குறித்து தகவல் தெரிந்ததும், இந்திய விமானப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.எதிர்பாராத விதமாக அந்த விமானம் வயலில் விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Aucun commentaire:

Enregistrer un commentaire