dimanche 4 mai 2014

கடவுளும் காப்பாற்றவில்லை சருமநோய் பற்றிய சில முக்கிய பதிவுகள்

  • மணிக்கட்டில் இப் பெண்ணுக்கு அரிப்பெடுத்தது. அவ்விடத்தில் சருமம் சற்றுக் கருமை படர்ந்து சொர சொரப்பாகவும் இருந்தது. இதுவும் ஒரு சரும நோய்தான்.
    கையில் நூல் கட்டியிருப்பதால் இப் பெண்ணுக்கு ஏற்பட்டிருப்பது (Allergic Contact Dermatitis) தொடர்பு ஒவ்வாமை தோலழட்சி என விஞ்ஞானத் தமிழில் சொல்லலாம். ஒட்டுக் கிரந்தி எனச் சொல்லலாமா தெரியவில்லை.

    இது ஏன் ஏற்பட்டது?                                                                                                          நூலில் உள்ள இரசாயனங்கள் காரணமாக இருக்கலாம். 
  • அல்லது வீட்டு வேலைகள் செய்யும் போது கைகளை அடிக்கடி நனைப்பதால் நூலில் ஊறியிருக்கும் ஈரலிப்பு, 
  • Holy Thread
    நூல் கட்டியவரைக் கடவுளும் காப்பாற்றவில்லை
  • அல்லது அதில் ஒட்டியிருக்கக் கூடிய சோப் காரணமாக இருக்கலாம். 
காரணம் எதுவானாலும் முதற் செய்ய வேண்டியது அந் நூலைக் கழற்ற வேண்டியதுதான்.


தோடு, மூக்குத்தி, காப்பு, மாலை, அரைஞாண் போன்ற ஆபரணங்களுக்கும் அணிகலங்களுக்கும் இவ்வாறு நேரலாம்.



சிமெந்து, தோற் பொருட்கள், ரப்பர் காலணிகள், ரப்பர் கையுறைகள், மருத்துவத்திலும், அழகு சாதனங்களாகவும் பயன்படுத்தும் கிறீம் வகைகள் போன்றவையும் தொடர்பு ஒவ்வாமை தோலழட்சிக்குக் காரணமாவதை அவதானிக்க முடிகிறது.

தோலழற்சி, ஒவ்வாமைத் தோலழற்சி

ஊறு விளைவிக்கக் கூடிய எந்த பொருளுக்கும் எதிரான சருமத்தின் பிரதிபலிப்பாக அழற்சி ஏற்படுகிறது. பெரும்பாலும் அப்பொருள் சருமத்துடன் தொடர்புறும் அந்த இடத்திலேயே ஏற்படும்.


Hair Dye Allergy
ஹெயர் டை பூசிய பெண்ணுக்கு நெற்றியிலும் ஏற்பட்டது
உதாரணமாக உள்ளாடையின் இலாஸ்டிக் தொடர்புறும் வயிறு மற்றும் பின்புறத்தில் சுற்றிவர ஏற்படலாம். கைக்கடிகாரத்தின் உலோகப் பகுதிகள் தொடர்புறும் மணிக்கட்டுப் பகுதியில் ஏற்படுகிறது.

சருமத்தில் ஏற்படும் அழற்சியை Irritant Dermatitis அந்நியப் பொருற் தொடர்பு தோல் அழற்சி என்பார்கள்.


அதுவே சருமத்திற்கு ஒவ்வாத பொருளால் ஏற்படுவதாக இருந்தால் அதனை தொடர்பு ஒவ்வாமை தோலழற்சி Allergic contact Dermatitis என்பார்கள்.

Hair Dye Allergy

ஒவ்வாத பொருள் சருமத்தில் பட்டவுடன் இது ஏற்படுவதில்லை. பலதடவைகள் தொடர்பு ஏற்படும்போது படிப்படியாக ஒவ்வாமை தோலழற்சி ஏற்படுகிறது.

ஆனால் இவ்வாறு எல்லாமே தொடர்புறும் அந்த இடத்திலேயே ஏற்பட வேண்டும் என்பது நியதியல்ல. உதாரணமாக முகத்திற்கு ஒரு லோசனைப் பூசும் போது அல்லது தலை முடிக்கு முடிச்சாயம் (Hair Dye) பூசும்போது முகம் முழுவதும் அல்லது தலை முழுவதும் அவ்வாறு பாதிக்கப்படுவதில்லை. சில இடங்களில் மட்டும் திட்டுத் திட்டாக தோல் அழற்சி ஏற்படுவதையே காண்கிறோம்.

ஒரு முறை இவ்வாறு அழற்சி ஏற்பட்டிருந்து அது குணமாகிவிட்டது என வைத்துக் கொள்வோம். இவ்வாறு தொடர்பினால் நோயை ஏற்படுத்திய பொருள் மீண்டும் தொடர்பு கொள்ளப்பட்டால் அல்லது அதே பொருள் வாயினால் உட்கொள்ளப்பட்டிருந்தால்
  • மீண்டும் அதே இடத்தில் சரும அழற்சி ஏற்படலாம். 
  • அல்லது இன்னும் அதிகமாகவும் பெரிதாகவும் ஏற்படவும் வாய்ப்புண்டு.

அறிகுறிகள்

சருமத்தில் பல விதமான மாற்றங்கள் அவ்விடத்தில் ஏற்படும்
  • செந்நிறமான சருமத் தடிப்புகள்
  • சருமத்தில் வீக்கங்கள்
  • அவ்விடத்தில் அரிப்பு கடுமையாக இருக்கும்
  • சருமம் வரண்டு, வெடிப்புகள் ஏற்பட்டு, சிவந்து தீக் காயங்கள் போலவும் தோற்றமளிக்கலாம்.
  • கொப்பளங்கள் எற்பட்டு அதிலிருந்து நீராகக் கசியக் கூடும், அது உலரந்து அயறு போலப் படையாக படியவும் கூடும்.
  • பெரும்பாலும் ஒவ்வாத பொருள் தொர்புற்ற அதே அடத்தில் தோன்றுவதால் நோயை நிர்ணயிக்க சுலபமாக இருக்கும். இல்லையேல் வேறு எக்ஸிமா போல மயங்க வைக்கும்.
  • சில தருணங்களில் வலியும் ஏற்படும்.

யாருக்கு எப்பொழுது
  • தொழில் உதாரணமாக சலவைத் தொழிலாளர், பெயின்ட் அடிப்பவர்கள்
  • பொழுதுபோக்குகள்
  • பயணங்கள்
  • அழகுசாதனப் பொருட்கள்
  • ஆபரணங்கள்
 போன்றவையே முக்கிய காரணங்களாகின்றன.


செயற்கை ஆபரணங்கள், மார்புக் கச்சை போன்றவற்றில் உள்ள கொழுக்கிகள், கைக்கடிகாரச் சங்கிலி, இடுப்பு பெல்ட்டில் உள்ள பக்கிள் போன்ற பலவற்றிற்கும் ஏற்படுவதற்குக் காரணம் அவற்றில் உள்ள உலோகமான ஆன நிக்கல் (Niclel) ஆகும்.


சப்பாத்துத் தோலைப் பதனிடப் பயன்படுத்தும் இரசாயனமான Potassium dichromate பலருக்கு இத்தகைய ஒவ்வாமை தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

முடிச்சாயத்தில் உள்ள இரசாயனமான Paraphenylenediamine தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

சப்பாத்து பொலிஸ், அழுக்கு அகற்றும் பொருட்கள் ஆகியவற்றில் கலந்திருக்கும் Turpentine பலருக்கு தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
Rubber slipper
இரப்பர் சிலிப்பர் போட்டவருக்கு
சோப்பில் உள்ள இரசாயனப் பொருட்களும் தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

தோலில் பூசும் சில களிம்பு மருந்துகள்.

தோலில் ஏற்படும் கிருமித் தொற்றுகளுக்கு எதிராக உபயோகிக்கப்படும் Neomycin என்ற மருந்து பலருக்கு அவ்விடத்தில் தோல் அழற்சியை ஏற்படுத்தலாம்.
மங்கலச் சின்னமான பொட்டு அலர்ஜி

பெல்ட் பக்கிளில் உள்ள நிக்கலக்கு ஒவ்வாமை
சிகிச்சை
  1. ஓவ்வாத பொருள் என்ன என்பதை இனங் கண்டு அதை தொடர்பு படாமல் ஒதுக்குவதே முறையான சிகிச்சையாகும். உதாரணமாக ஒட்டுப் பொட்டுக் காரணம் என நீங்கள் கண்டறிந்து அதை அணியாது விட்டாலும் தோல்அழற்சி குணமாகி சருமம் தனது வழமையான நிறத்தையும் குணத்தையும் அடைய 2-4 வாரங்கள் எடுக்கலாம். ஆனால் சுகம்தானே என மீண்டும் அணிந்தால் பழையபடி தோலழற்சி ஆரம்பித்துவிடும்.
  2. சிலவகை மருந்திட்ட கிறீம் வகைகளை மருத்துவ ஆலோசனையுடன் பூசிவரக் குணமாகும். பெரும்பாலும் ஸ்டிரோயிட் வகை மருந்துகளே (Steroid) உபயோகிக்கப்படுகின்றன.
  3. கடுமையான நோயெனில் அலஜியைத் தணிக்கும் மருந்துகளை உட்கொள்ள கொடுக்கக் கூடும்.
  4. எவ்வாறாயினும் நோயை ஏற்படுத்தும் கள்ளனைக் கண்டறிந்து தவிர்ப்பதே நிரந்தரத் தீர்வாகும்.
சருமநோய் பற்றிய சில முக்கிய பதிவுகள்

இதுவம் ஒரு வகை தோல் நோய் - நுமலர் எக்ஸிமா  ......    இந்த நோயாளியன் கால்களில் கரி அப்பியதுபோல கறுத்தத் திட்டுத் திட்டுகளாக கால்கள் இரண்டிலும் இருக்கிறது. அவற்றில் கடுமையான அரிப்பும் இருக்கிறது. நீண்ட நாட்களாக மாறாது இருக்கிறது என்றார்.

இது ஒரு வகை எக்ஸிமா ஆகும். நுமலர் எக்ஸிமா Nummular eczema என அழைப்பர்.

வழமையாக நாம் காணும் எக்ஸிமா போல கண்டபடி பரந்து கிடக்காமல், அதன் ஓரங்கள் நாணயங்கள் போல கூர்மையான சுற்றுவட்ட அடையாளத்துடன் இருக்கின்றன.
லத்தின் மொழியில் நுமலர் (Nummular) என்பதன் பொருள் நாணயம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சீக்கிரத்தில் குணமடையாது. குளிர்காதத்தில் சற்று அதிகமாகும்.காலம் செல்லச் செல்ல நடுப்பகுதி சற்று வெளிர் நிறமடைந்து சொரசொரப்பாக பங்கஸ் தொற்றுப் போன்ற மாயத் தோற்றத்தை அளிக்கும்பொதுவாகக் கால்களில் காணப்படும்.
சில வேளை முதுகு, நெஞ்சுப் புறத்திலும் காணப்படும். பொதுவாக ஏதாவது ஒவ்வாமையால் ஏற்படும் எக்ஸிமா ஆகும்..வரட்சியான சருமம் உள்ளவர்களில் அதிகம் ஏற்படுகிறது.
இதனால் சருமத்தை உறுத்துபவை நோயைத் தீவிரமாக்கும்.
உதாரணமாக கம்பளி உடைகள், சோப், அடிக்கடி குளித்தல் ஆகியன நோயைத் தீவிரமாக்கும்.
ஏனைய சொரசொரப்பான துணிகளாலான ஆடைகளும், கடுமையான சோப்பில் துவைத்த ஆடைகளும் அவ்வாறே தீவிரமாக்கும்.பொதுவாகச் சற்றுக் காரமான கோர்ட்டிகசோன் (Clobesterol) மருந்துகளே  தேவைப்படும். அவற்றை தினமும் ஒரு முறைக்கு மேல் பூசக் கூடாது. சிறிய அளவு கிறீமை எடுத்தால் போதுமானது. சற்றுத் தேய்த்துப் பூசினால் நன்கு உறிஞ்சப்படும்.





ஆனால் அத்தகைய மருந்துகளை நொய்த தோலுடைய இடங்களான முகம், அக்குள், மலவாயில், பாலுறுப்பை அண்டிய இடங்களில் பூசக் கூடாது. அத்தகைய இடங்களுக்கு ஏற்ற வேறு காரம் குறைந்த மருந்துகள் உள்ளன.

இவர்களுக்கு வரட்சியான சருமம் இருப்பதால் தினமும் குளித்த பின் சருமத்தைக் குளிர்மையாக வைத்திருப்பதற்கு வசிலின் Vaseline கிறீம் உபயோகிக்கலாம்.

அது பிடிக்காதவர்கள் விலையுர்ந்த கீர்ம்களான Efaderm, Neutrogena போன்றவற்றை உபயோகிக்கலாம்.

இவையும் பிடிக்காதவர்கள் இயற்கையான ஒலிவ் ஓயில், நல்லெண்ணெய் ஆகியவற்றை உபயோகித்துத் தமது சருமத்தை வரட்சியின்னிறிப் பாதுகாக்க முடியும்.

இவர்கள் சுடுதண்ணீர் உபயோகிப்பது நல்லதல்ல. எமது சூழலில் சாதாரண நீரே போதுமானது. இல்லையேல் நகச் சூட்டு நீரில் குளிக்கலாம். குளித்த பின் டவலினால் அழுத்தித் தேய்த்துத் துடைக்கக் கூடாது. நீரை ஒற்றி எடுப்பதே சருமத்தைப் பாதுகாக்க உதவும்.வைரஸ் வோர்ட்ஸ் என்பன சருமத்தில் தோன்றும் சிறிய சொரசொரப்பான கட்டிகளாகும்.  இவை ஆபத்தற்றவை. புற்று நோயல்லாத கட்டிகளாகும்.

பாலுண்ணி என அழைப்பதும் இதைத்தான். இவை முகம், கழுத்து, முதுகு, நெஞ்சு என உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக் கூடியவை.


என்றாலும் பெரும்பாலும் கைளிலும் கால்களிலுமே அதிகம் தோன்றுகின்றன.



இவை ஒரு வைரஸ் நோயாகும்.  Human Papilloma Virus -HPV என்ற வைரஸ்சால் ஏற்படுகின்றன. இதில் 80க்கு மேற்பட்ட உபவகைகள் உள்ளன. இந் நோயின் போது எமது சருமத்தின் மேற்பகுதியில் உள்ள கெரட்டின் என்ற புரதத்தை அதிகமாக உற்பவிக்கின்றன. இதுவே வைரஸ் வோர்ட்டின் கடினமானதும் சொரப்பான தன்மைக்குக் கராணமாகும்.

எங்கே தோன்றுகின்றன, அவற்றின் தன்மை என்ன போன்றவற்றைப் பொறுத்து அவற்றின் பெயர் அமையும். பாலுறுப்பை அண்டிய பகுதியில் தோன்றுபவை பாலியல் வோர்ட் (Genital warts) எனப்படும். பாதத்தில் வருபவை பிளான்டர் வோர்ட் (plantar warts -verrucas) எனப்படும்.

ஆனால் அவை பற்றி இன்று பேசவில்லை.


16 வயதுக் குட்டித் தேவதை இவள். நல்ல நிறம், கவர்ச்சியான கண்கள். ஆனால் முகத்தில் ஒரு சோகம் அப்பிக் கிடந்தது. காரணம் அவளது சுட்டு விரலில் உள்ள சொரப்பான தோல் நோயாகும். கரடு முரடான பாறைக் கல்லுப் போல வளர்ந்திருந்தது.

இதுவும் வைரஸ் வோர்ட்தான். ஆனால் மொஸக் வோர்ட் (mosaic wart) எனத் தனிப் பெயர் இருக்கிறது. உண்மையில் இது தனி ஒரு வோர்ட் அல்ல. பல சிறிய நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் உள்ளன. மேற் பகுதியை மெதுவாகப் பிரித்துப் பார்த்தால் அதனுள் பல சிறிய தனித்தனி வோர்ட்டுகள் இருப்பது தெரியும்.

அவளது உடலில் அதைப் போன்ற ஆனால் சிறிய பல கட்டிகள் உடல் முழுவதும் புதிதாகத் தோன்றின. உற்றுப் பார்த்தீர்களேயானால் அவளது நடுவிரலில் தனியான ஒரு கட்டி இருக்கிறது.  இதுவும் ஒரு  வைரஸ் வோர்ட்தான். இதனை கொமன் வோர்ட் (Common wart) என்பார்கள்.  

மற்றொரு பையனின் சுட்டு விரலில் உட்பகுதியிலும் அத்தகைய ஒரு கட்டி இருக்கிறது. இதுவும் அத்தகைய கொமன் வோர்ட்தான்.
 

இதே போல விரல் நுனியில் நகத்திற்கு அண்மையில் தோன்றுபவற்றை பெரிஅங்கல் வோர்ட் (Periungual warts) என்பார்கள்.


சிறிய திட்டி போல இருக்கும். சிலரில் சொரப்பான பல முனைகள் இருக்கலாம். பெரும்பாலும் ஒன்றுக்கு மேல் தோன்றும்.

இவற்றின் நிறம் வெண்மையாகவோ, சாம்பல் பூத்ததாகவோ இருக்கலாம். 0.5 செமி முதல் 3 செமி வரை வளரக் கூடியது.

ஒழுங்கின்றிச் சொரசொரப்பாக இருப்பதால் இது புற்று நோயாக இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பும். ஆனால் புற்று நோயல்ல.

எந்த மருத்துவமும் இன்றித் தானாக 6 மாதங்களில் மாறிவிடும். சிலருக்கு குணமாக இரண்டு வருடங்களுக்கு மேல் எடுக்கலாம்.
ஆயினும் பல வகை மருத்துவ முறைகள் உள்ளன.

சலிசிலிக் அமிலம் மற்றும் லக்றிக் அமிலம் கலந்த களிம்பு மருந்துகள் உதவும்.

மற்றொரு முறை, திரவ நைதரசனைக் கொண்டு அதனை உறைய வைத்து அழிப்பதாகும். இது (Cryotherapy) சொல்லப்படும் மருத்துவமாகும்.

அவ்விடத்தை மரக்கச் செய்து சிறுசத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம்.இந்த நோயாளியன் கால்களில் கரி அப்பியதுபோல கறுத்தத் திட்டுத் திட்டுகளாக கால்கள் இரண்டிலும் இருக்கிறது. அவற்றில் கடுமையான அரிப்பும் இருக்கிறது. நீண்ட நாட்களாக மாறாது இருக்கிறது என்றார்.

இது ஒரு வகை எக்ஸிமா ஆகும். நுமலர் எக்ஸிமா Nummular eczema என அழைப்பர்.

வழமையாக நாம் காணும் எக்ஸிமா போல கண்டபடி பரந்து கிடக்காமல், அதன் ஓரங்கள் நாணயங்கள் போல கூர்மையான சுற்றுவட்ட அடையாளத்துடன் இருக்கின்றன.


லத்தின் மொழியில் நுமலர் (Nummular) என்பதன் பொருள் நாணயம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கிரத்தில் குணமடையாது. குளிர்காதத்தில் சற்று அதிகமாகும்.

காலம் செல்லச் செல்ல நடுப்பகுதி சற்று வெளிர் நிறமடைந்து சொரசொரப்பாக பங்கஸ் தொற்றுப் போன்ற மாயத் தோற்றத்தை அளிக்கும்.

பொதுவாகக் கால்களில் காணப்படும்.
சில வேளை முதுகு, நெஞ்சுப் புறத்திலும் காணப்படும். பொதுவாக ஏதாவது ஒவ்வாமையால் ஏற்படும் எக்ஸிமா ஆகும்.


வரட்சியான சருமம் உள்ளவர்களில் அதிகம் ஏற்படுகிறது.

இதனால் சருமத்தை உறுத்துபவை நோயைத் தீவிரமாக்கும்.
உதாரணமாக கம்பளி உடைகள், சோப், அடிக்கடி குளித்தல் ஆகியன நோயைத் தீவிரமாக்கும்.
ஏனைய சொரசொரப்பான துணிகளாலான ஆடைகளும், கடுமையான சோப்பில் துவைத்த ஆடைகளும் அவ்வாறே தீவிரமாக்கும்.

பொதுவாகச் சற்றுக் காரமான கோர்ட்டிகசோன் (Clobesterol) மருந்துகளே தேவைப்படும். அவற்றை தினமும் ஒரு முறைக்கு மேல் பூசக் கூடாது. சிறிய அளவு கிறீமை எடுத்தால் போதுமானது. சற்றுத் தேய்த்துப் பூசினால் நன்கு உறிஞ்சப்படும்.

ஆனால் அத்தகைய மருந்துகளை நொய்த தோலுடைய இடங்களான முகம், அக்குள், மலவாயில், பாலுறுப்பை அண்டிய இடங்களில் பூசக் கூடாது. அத்தகைய இடங்களுக்கு ஏற்ற வேறு காரம் குறைந்த மருந்துகள் உள்ளன.

இவர்களுக்கு வரட்சியான சருமம் இருப்பதால் தினமும் குளித்த பின் சருமத்தைக் குளிர்மையாக வைத்திருப்பதற்கு வசிலின் Vaseline கிறீம் உபயோகிக்கலாம்.

அது பிடிக்காதவர்கள் விலையுர்ந்த கீர்ம்களான Efaderm, Neutrogena போன்றவற்றை உபயோகிக்கலாம்.

இவையும் பிடிக்காதவர்கள் இயற்கையான ஒலிவ் ஓயில், நல்லெண்ணெய் ஆகியவற்றை உபயோகித்துத் தமது சருமத்தை வரட்சியின்னிறிப் பாதுகாக்க முடியும்.

இவர்கள் சுடுதண்ணீர் உபயோகிப்பது நல்லதல்ல. எமது சூழலில் சாதாரண நீரே போதுமானது. இல்லையேல் நகச் சூட்டு நீரில் குளிக்கலாம். குளித்த பின் டவலினால் அழுத்தித் தேய்த்துத் துடைக்கக் கூடாது. நீரை ஒற்றி எடுப்பதே சருமத்தைப் பாதுகாக்க உதவும்..............டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire