dimanche 25 mai 2014

விசாரணைக்கான நிதி அமெரிக்கா, கனடா, நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகள் பகுதி அளவில் பூர்த்தி

சிறிலங்காவுக்கு எதிரான விசாரணை நடத்துவதற்கான நிதி முழுவதுமாக திரட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் உடனடியாக சர்வதேச விசாரணையை ஆரம்பிப்பதில் ஆணையாளர் நவநீதம் பிள்ளை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைக்கான நிதி தேவையை அமெரிக்கா, கனடா, நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகள் பகுதி அளவில் பூர்த்தி செய்வதாக அறிவித்திருந்தன.
எஞ்சிய தொகைக்காக ஐக்கிய நாடுகள் சபையிடம் இந்த நிதி கோரப்பட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள குழுவை உத்தியோகபூர்வமாக ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிவிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire