jeudi 29 mai 2014

சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிர்தி இரானி,

தனது கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிர்தி இரானி, தம் மீதான குற்றச்சாட்டு குறித்த தனது மௌனத்தை் கலைத்து, தன் பணியைப் பார்த்துத் தனது திறமையை மதிப்பிடுமாறு தெரிவித்துள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிர்தி இரானி ஒரு பட்டதாரிகூட இல்லை என்று கூறிய காங்கிரஸ் தரப்பினர் அவருக்குத் தரப்பட்ட அமைச்சுப் பதவிக்கு வேண்டிய திறனை கேள்விக்கு உட்படுத்தினர்.38 வயதான ஸ்மிர்தி இரானி, ஒரு தொலைக்காட்சி நடிகையாக இருந்து பின் அரசியலிக்குள் நுழைந்தார்.
‘எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியிலிருந்து என் கவனத்தை திசை திருப்பும் வகையில் சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக’, அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தன் திறமையின் அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொள்ள கட்சி தனக்கு இந்த பொறுப்பை அளித்துள்ளதாகவும், வேறு எந்த கருத்தையும் தெரிவிக்க தான விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் ஸ்மிர்தி இரானி தனது கல்வி தகுதி குறித்து முரண்பாடான தகவல்கள் அளித்தமைக்காக அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
வெறும் 12ஆம் வகுப்பு படித்த ஒருவர் எவ்வாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பளிக்கப்பட்டார் என்று மது கிஷ்வார் என்ற பெண்கள் உரிமைகள் ஆர்வலர் எழுப்பிய கேள்வி இந்த சர்ச்சையை உருவாக்கியது.
அதனை அடுத்து சில காங்கிரஸ் தலைவர்களும் ஸ்மிர்தி இரானியின் கல்வி தகுதி குறித்து விமர்சித்தனர்.
காங்கிரஸ் விமர்சன்ங்களுக்கு பதிலளித்த பாஜக தலைவரும் மத்திய நீர்வளத்துறை அமைச்சருமான உமா பாரதி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா கந்தியின் கல்வி தகுதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire