mercredi 21 mai 2014

எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதை

afcaeதேங்காய், நம் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதை தான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல, சிறந்த மருத்துவப் பொருளும்கூட என்கிறது சித்த மருத்துவம்.
தேங்காயில் உள்ள ‘பேட்டி ஆசிட்’ (Fatty acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச்சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல்நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம், தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள்.
புரதச்சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் ‘சி’, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய்ப் பால், உடல் வலிமைக்கு நல்லது.
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யைத் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும்.
கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளைப்படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தைச் சேர்த்து, தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

Aucun commentaire:

Enregistrer un commentaire