jeudi 22 mai 2014

சிகரெட் இனி அடையாள அட்டையை காண்பித்தால்தான் கிடைக்கும்

அமெரிக்காவில் சிகரெட்டை வாங்க வேண்டுமென்றால் வயதை நிரூபிக்கும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
 அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் தங்கள் உடல் நலம் குறித்த விழிப்புணர்வை பெறும் வகையில் சிகரெட்டுகள் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் தேதி இந்த சட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும், சட்டம் அமல்படுத்துவதற்கு முன் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
 நியூயார்க்கில் சாலையோரம் அமைந்துள்ள கடைகளில் சிகரெட்டுகள் அதிகமாக விற்கப்படுகின்றன. எனவே அந்த கடைகளின் வாசலில் 21 வயதிற்கு கீழ் சிகரெட்டுகள் புகையிலை விற்கக்கூடாது என்ற எச்சரிக்கை வாசகம் ஒட்டப்பட்டுள்ளது.
 வாடிக்கையாளர்கள் கடைகளில் சிகரெட்டுகள் வாங்க வரும்போது தங்கள் வயதை நிரூபிக்கும் வகையில் அடையாள அட்டைகளை காண்பிக்க வேண்டும் என்றும், அதை கடைக்காரர்கள் ஸ்கேன் செய்து பார்த்து வயதை உறுதி செய்த பின்னர்தான் சிகரெட்டை அவர்களுக்கு விற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 இந்த புதிய சட்டத்தால் நியூயார்க்கில் 18 முதல் 20 வயதிற்கு உட்பட்டவர்கள் சிகரெட்டுகள் பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அமெரிக்காவின் மற்ற மாகாணங்களுக்கும் இந்த சட்டத்தை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire