dimanche 18 mai 2014

யாழில் 300 மேற்பட்ட ஆடுகள் மூடர்களாள் வெட்டிச் சரிக்கப்பட்டன

பண்டத்தரிப்பு பிரான்பற்று புளியடி அம்மன் ஆலயத்தில் ஆட்டு கடா வெட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட ஆட்டு கடாக்கள் மாலை மரியாதைகளுடன் வாகனங்களில் கொண்டுவரப்பட்டு ஈவிரக்கமின்றி வெட்டிச் சரிக்கப்பட்டன.
கடாக்கள் வெட்டு முடிவில் அங்கு பார்வையிடச் சென்ற மாணவர், அவற்றினைப் படம்பிடிக்க முற்பட்ட வேளை ஆலயத்தில் நின்ற ஒலிபெருக்கி உரிமையாளர் ஒருவரால் மோசமாகத் தாக்கப்பட்டார்.
தான் ஒரு பல்கலைக்கழக மாணவர் என அடையாளப்படுத்தியிருந்தும் அங்கு படம் எடுக்கக்கூடாது என்பது தெரியாது என்று கூறியிருந்தும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரது புகைப்படக்கருவியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்தியவர் 4ம் வட்டாரம் பற்றிமாதா வீதி பிரான்பற்றைச் சேர்ந்தவர் எனவும், புளியடி அம்மன்கோவிலின் அறங்காவலர்களில் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire