lundi 24 novembre 2014

வடபுலத்தான். ஆயர்களுக்கும் ஆயர் இல்லங்களுக்கும் 12 கேள்விகள்

1. வடக்குக் கிழக்கில் உள்ள ஆயர் இல்லங்கள் தங்களின் சொத்து விவரங்களை மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேணும். முக்கியமாக வடபகுதி ஆயர்கள் இதைச் செய்ய வேணும்.

2.  இந்த இல்லங்கள் இப்பொழுது மக்களுக்குச் செய்து வருகின்ற சேவைகள் என்ன?
3. யுத்தத்தின்போதும் யுத்தத்தின் பிறகும் இவை தமிழ்பேசும் மக்களுக்கு ஆற்றிய அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகள் என்ன?
4.  போரினால் பாதிக்கப்பட்டு, ஆண்துணையை இழந்த பெண்களுக்கான உதவிகளையும் ஆதரவையும் இவை செய்திருக்கின்றனவா? அப்படியென்றால் அவை எந்தெந்தப் பகுதிகளில் செய்யப்படுகின்றன? எத்தனைபேர் அதனால் பயன்பெறுகிறார்கள்?
5.  உடல் உறுப்புகளை இழந்தவர்களாகவும் உடற் செயற்பாட்டை இழந்தவர்களாகவும் ஏறக்குறைய 12000 க்கும் மேற்பட்டவர்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இருக்கிறார்கள். இவர்களுக்கான உதவித்திட்டங்களையும் ஆதரவுச் செயற்பாடுகளையும் இவை செய்துள்ளவா? அல்லது இப்பொழுது கூட அப்படியான திட்டம் ஏதும் இந்த இல்லங்களிடம் உண்டா?
6. போரினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 வீதமானவர்கள் உள ஆற்றுப்படுத்துகைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதைச் செய்யக் கூடிய ஆற்றல் அநேகமான மதபோதகர்களுக்கு உண்டு. அதை இவர்கள் செய்கிறார்களா?
7. வடமாகாணசபை செய்திருக்க வேண்டிய பணிகளைப் பற்றி இதுவரையில் ஒரு ஆய்வைச் செய்திருக்கின்றார்களா?
8.  வன்னிப் பிரதேசத்தை விட்டு வடமாகாணசபையின் விவசாய அமைச்சு கால்நடை அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவை யாழ்ப்பாணத்திற்கு இரவோடு இரவாக கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இவற்றைப்பற்றி ஆயர்களுடைய அபிப்பிராயம் என்ன? ஆயர் இல்லங்களின் நிலைப்பாடு என்ன?
9. வடமாகாண சபை வன்னிக்கான ஆசிரியர்களை முறையாகப் பகிர்ந்தளிக்கவில்லை. இதைப்பற்றி மன்னார் ஆயரின் அபிப்பிராயம் என்ன? யாழ்ப்பாணத்திலேயே மேலதிகமான ஆசிரியர்கள் முகாம் இட்டுள்ளார்கள். வன்னியில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்க யாழப்பாணத்தில் இப்படி அதிகமான ஆசிரியர்களை வைத்திருப்பது சரியா? இதைப்பற்றி யாழ்ப்பாண ஆயருடைய பதில் என்ன?
10. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஆயர் இல்லங்களின் பரிந்துரை என்ன? அதாவது ஆயர்களோ அல்லது ஆயர் இல்லங்களோ முன்மொழிகின்ற தீர்வுத்திட்டம் என்ன? இந்தத் தீர்வுத் திட்டத்தில் வடக்குக் கிழக்கில் பன்மைத்தன்மைக்கும் பல்லின சமூகங்களுக்கும் இடமுண்டா?
11.  பிற மதப்பிரிவினருடனும், பிற சமூகங்களோடும் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை ஆயர்கள் மேற்கொண்டிருக்கிறார்களா? இனிமேலாவது அவ்வாறு மேற்கொள்வதற்கான திட்டம் ஏதும் உண்டாஃ
12.  இலங்கையில் நிரந்தர அமைதியை எட்டுவதற்கான ஆயர் இல்லங்களின் பரிந்துரை எவ்வாறானது?

Aucun commentaire:

Enregistrer un commentaire