mercredi 26 novembre 2014

இலங்கையின் முன்னேற்றத்திற்கு சீனா ஊடுருவல் என்றாள்..சீனா சென்னை முதல் டெல்லி வரையிலான அதிவேக ஊடுருவல் புல்லட் ரயில் சேவையாம்

China - Transport - Rail Network - Bullet Trainசென்னை முதல் டெல்லி வரையிலான அதிவேக புல்லட் ரயில் இயக்குவதற்காக, சீனாவில் செயல்படுத்தபட்டு வரும் புல்லட் ரெயில் திட்டங்கள் குறித்து இந்திய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சீனாவின் தலைநகரான பீஜிங் மற்றும் குவாங்ஸோ மாகாணத்தின் இடையே 2, 298 கிலோ மீட்டர் நீளமுள்ள இருப்புப் பாதையில் அதி நவீன புல்லட் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதற்கு பயணிகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
china bullat train 1
மணிக்கு சுமார் 300 கி.மீ. வேகத்தில் ஓடும் இந்த புல்லட் ரயில்கள், இப்பாதையின் ஒட்டுமொத்த தூரத்தையும் எட்டே மணி நேரங்களுக்குள் கடந்து விடுவதால், உலகிலேயே மிகவும் நீளமான புல்லட் ரயில் சேவையாக இது கருதப்படுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.
இதே போல, இந்தியாவிலும் முக்கிய நகரங்களை இத்தகையை அதிநவீன புல்லட் ரயில்களின் மூலம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியா வந்த சீனப் பிரதமரிடமும் இது தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, சென்னை – டெல்லி இடையிலான 1,754 கிலோ மீட்டர் தூரத்தை புல்லட் ரயில் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
சென்னை – டெல்லி புல்லட் ரயில் திட்டத்துக்கு சுமார் 32.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு இந்தத் திட்டப் பணிகளுக்கான தொழில் நுட்ப ஒத்துழைப்பை இலவசமாக வழங்குவதாக சீனா அறிவித்தது.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய ரயில்வே துறையை சேர்ந்த சில மூத்த அதிகாரிகள், சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்றுள்ளனர்.
புல்லட் ரயில் பாதைக்கான கட்டமைப்பு பணிகள், இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அந்நாட்டு ரயில்வே உயரதிகாரிகளுடன் அவர்கள் தீவிர ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.
சீனாவின் உதவியோடு அமையும் சென்னை – டெல்லி இடையிலான புல்லட் ரயில் சேவை தொடங்கி விட்டால், உலகிலேயே மிகவும் நீளமான இரண்டாவது புல்லட் ரயில் சேவையாக இது அமையும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire