vendredi 21 novembre 2014

சந்திரிக்கா சட்ட சிக்கல்கல்களால் போட்டியிடுவதை தவிர்த்தது மைத்திரிபாலவை களம் இறக்கிறார்.

இதேவேளை சட்ட சிக்கல்களை சுட்டிக்காட்டி தன்னுடைய நெருங்கிய சகாக்கள் விடுத்த அறிவுறுத்தல்கள் காரணமாக தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலளார் மைத்திரிபால சிறிசேனாவை பொதுவேட்பாளராக  களம் இறக்கிறார்  100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய உள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு சந்தர்ப்பம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீனமான முறையில் தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்குமுhறு இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் நீதிமன்றத்துறை ஆகியன சுயாதீனமாக பக்கச்சார்பின்றி இயங்க நடவடிக்கை எடுக்கப் போவதாகத்தெரிவித்துள்ளார்.

100 நாட்களில் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய எனக்கு அதிகாரத்தை வழங்குங்கள் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.ஷ

புகைப்பிடித்தல் மற்றும் மதுபானத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்திற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டு காலத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மிகவும் துயரம் மிக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பம் ஒன்று நாட்டின் ஆட்சி அதிகாரத்தை நடத்தி வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் ஊழல் மோசடிகள், வஞ்சகச் செயல்கள், குற்றச் செயல்கள் பாரியளவில் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நீதியின் ஆதிக்கம் வலுவிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்த வெற்றியின் பின்னர் அரசாங்கம் தவறான பாதையிலேயே பயணம்செய்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2004ம்ஆண்டில் ஆட்சி அமைப்பதற்கு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது எனவும், 1994ம் ஆண்டிலிருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முயற்சித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1974 முதல் 1994ம் ஆண்டு வரையில் கண்ணீருடன் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநயாக்க கட்சியை கட்டிக் காத்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire